|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
கலக்கிய கல்லூரி மாணவி
-பாராட்டிய ரம்யா கிருஷ்ணன்

"எங்க பாட்டி குளிக்கறதும் இந்த சோப்புதான்" என்று சிந்தால் சோப்புக்கே சோப்பு போட்ட ரம்யா கிருஷ்ணன், நேற்று ஒரு சாதாரண கல்லூரி மாணவியை ஒரே நாளில் விஐபி ஆக்கிவிட்டார்.

'சிந்தால் நிறுவனம் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் தங்கம் சீரியலில் அவருடன் சேர்ந்து நடிக்க ஒருவருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க நினைத்தது. இதற்காக சிந்தால், சரும பாதுகாப்புக்கு சவால்' என்ற பெயரில் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து தமிழகம் முழுவதிலும் இருந்து போட்டியாளர்களை கலந்து கொள்ள வைத்திருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2376 பேர் கலந்து கொண்டார்கள். இதில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவிகள். அவர்களில் சரும அழகு, மற்றும் நடிப்பு திறமையை கணக்கிட்டு 16 பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். இவர்களின் திறமையை நேரடியாக சோதித்த ஒரு குழு ஒரே ஒருவரை தேர்வு செய்தது. அவர் வித்யா! கோயமுத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி. இவருக்கு வெற்றி பதக்கம் அளித்து நெற்றியில் ஒரு முத்தத்தையும் கொடுத்தார் ரம்யாகிருஷ்ணன்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றது யார் என்பதை விடுங்கள். கலந்து கொண்ட 16 போட்டியாளர்களும் மேடையில் நடத்திக் காட்டிய பார்பார்மென்ஸ் இருக்கிறதே, பலே... பலே...

சின்னத்திரைக்கு நடிக்க வந்த வித்யாவுக்கு அந்த மேடையிலேயே அதிர்ஷ்டம் அடித்தது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் டி.பி.கஜேந்திரன் தனது அடுத்த படத்தில் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter