|
விதி வலியதுன்னு வீதிக்கு ஓடிவந்தா அங்க ஒரு லாரி, மோதி தள்ள வந்திச்சாம். அப்படி ஒரு சிக்கல்தான் தம்பிக்கு இந்த ஊரு தயாரிப்பாளருக்கு!
கடந்த வாரத்தில் ஒருநாள் இப்படத்தின் இயக்குனர் பத்ரி சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுடன் போய் தயாரிப்பாளரின் வீட்டை முற்றுகையிட்டாராம். காரணம் சம்பள பாக்கி. அதுவும் பெரிய அளவு பாக்கியில்லை. பேசிய சம்பளத்தில் 27 லட்சத்தை செட்டில் செய்துவிட்டவர், மூன்று லட்சம் பாக்கி வைத்துவிட்டாராம். அதற்காகதான் இப்படியரு ஆக்ரோஷம்.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் யாருய்யா டைரக்டரு? என்று ஆவேசத்தோடு வெளியே வருவதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. இப்படி ஒரு அற்புதமான(?) இயக்குனர், எண்ணி பணத்தை வை என்று தயாரிப்பாளரை நெருக்கியதை வருத்தத்தோடு அலசுகிறது ரிப்போர்ட்டர் ஏரியா.
கடைசியில் என்னாச்சு? தயாரிப்பாளரு அங்கே இங்கே புரட்டி மிச்ச மூணு லட்சத்தை மூக்கால் அழுதுகொண்டே கொடுத்தாராம். |