|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
ஆறு மணிக்கு மேல கண்காணிக்கறதா?
-சரத்குமார் அலுப்பு

சரத்குமார் நடிக்கும் புதிய படம் விடியல். இதுகுறித்து பேசுவதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் சரத். ஆனால் சினிமா பற்றிய கேள்விகள் மட்டுமே கேட்க வேண்டும் என்ற சின்ன விருப்பத்தோடு அழைப்பு விடுத்தார்கள் அவரது தரப்பில். என்றாலும், ரஞ்சிதா விவகாரத்தில் துவங்கி, அஜீத் விவகாரம் வரை கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டது. ஆறு மணிக்கு மேல யாரு என்ன செய்யுறாங்கன்னு பார்க்கறது நடிகர் சங்கத்தோட வேலை கிடையாது என்று எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சரத் சொன்ன சில விஷயங்கள் நிஜமாகவே அடடே... ரகம்!

தமிழ்சினிமாவில் இப்போ விநியோகஸ்தர்கள் குறைஞ்சிட்டாங்க. பெரிய பட்ஜெட்டில் படங்கள் எடுத்தாலும் ஏதாவது ஒரு சில படங்கள்தான் போட்ட பணத்தை வசூல் பண்ணுது. அதனால் வெறும் ஒன்றேகால் கோடியிலிருந்து மூன்று கோடி பட்ஜெட்டுக்குள் படங்களை நானே தயாரிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அந்த கதைக்கு தேவைப்பட்டா அதில் நானே நடிப்பேன். அது மட்டுமல்ல, இதுபோன்ற படங்களில் என் அண்ணன் பையனை நடிக்க வைக்கிற எண்ணமும் இருக்கு. என்னை சின்ன வயசில பார்த்த மாதிரியே அவரது தோற்றம் இருக்கும் என்றார் சரத்.

இன்னொரு முக்கியமான சர்வேயும் எடுத்து வருகிறாராம். எந்தெந்த ஹீரோக்களுக்கு எந்தெந்த ஏரியாவில் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களை வைத்து எத்தனை கோடியில் படம் எடுத்தால் லாபம் கிடைக்கும் என்றெல்லாம் விரிவாக அலசப் போகிற சர்வே அது. இது முழுக்க முழுக்க எனக்கு மட்டும்தான். இந்த சர்வேயை சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு காட்டுவது என் நோக்கம் அல்ல என்றார் சரத்.

கொசுறு செய்தி- பழஸிராஜா படத்திற்கு பின் மலையாளத்திலிருந்து ஏராளமான அழைப்புகள் வருகிறதாம் அவருக்கு. தற்போது மூன்று படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter