|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
ஸ்ரேயாவுக்கு வைக்கப்பட்ட செக்!
அபராத தொகை ஐந்து லட்சமாம்...

தமிழ்சினிமா நடிகர் நடிகைகளிடம் தேங்கிக் கிடக்கும் அட்வான்ஸ் தொகையை கலெக்ஷன் செய்தாலே இன்னொரு எந்திரன் எடுக்கிற அளவுக்கு சில்லறை தேறும்! அந்தளவுக்கு அட்வான்சை வாங்கிக் கொண்டு கால்ஷீட் கொடுக்காமலோ, அல்லது கால்ஷீட் வேண்டாம் என்பவர்களுக்கு பணத்தை திருப்பி தராமலோ ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பலர்.

இப்படி பணத்தை கொடுத்த பாதி தயாரிப்பாளர்கள் தொழிலையே வெறுத்துவிட்டு சொந்த ஊருக்கு மூட்டை கட்டிவிட்டார்கள். பாதி பேர் கொடுத்த பணத்தை திரும்பவும் வாங்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஸ்ரேயா வாங்கிய அட்வான்ஸ் பணத்தை வட்டியோடு வசூல் பண்ணி கொடுத்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

பொல்லாதவன் பட தயாரிப்பாளர் கதிரேசனிடம் பத்து லட்சம் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு கால்ஷீட் தராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார் ஸ்ரேயா. எப்படி எப்படியோ கேட்டுப் பார்த்தவர், கடைசியாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய, பரபரப்பாக நடந்தது பஞ்சாயத்து. நடிகர் சங்கமும் இந்த விவாதத்தில் கலந்து கொண்டது. இறுதியாக எடுத்த முடிவு?

ஸ்ரேயா வாங்கிய அட்வான்ஸ் தொகையோடு வட்டி தொகையாக ஐந்து லட்சத்தை சேர்த்து வழங்க வேண்டும்! பல வருடங்களாக நீடித்த இந்த பிரச்சனைக்கு இப்படி ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது மேற்படி சங்கங்கள்.

இந்த தீர்ப்பை கேட்டு பிற நடிகர் நடிகைகள் கொஞ்சம் ஆடிதான் போயிருக்கிறார்களாம்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter