|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
வராத இசைஞானி
-வாடிக் கொண்டிருக்கும் ஊழியர்கள்

இசைஞானி இளையராஜாவின் பரபரப்பான காலங்களில் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் எப்போதும் கூட்டம் குவிந்திருக்கும். அவர் 'பார்த்தாலே பிரசாதம், பரிவுடன் பேசினால்... ஆசிர்வாதம்' என்ற காலமெல்லாம் இருந்தது. ஆனால் அதன்பின் ஏற்பட்ட ரசனை மாற்றம் ராஜா என்ற மகா கலைஞனையும் பின்னுக்கு தள்ளிவிட்டது. ஆனாலும் அந்த ஒலிப்பதிவுக் கூடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் ராஜாவின் இசையால் அடுக்கப்பட்டது போல அத்தனை தெய்வீகம் நிரம்பியிருந்தது. இப்போது அதற்கும் பிரச்சனை என்கிறார்கள்.

படங்கள் இல்லையென்றால் தனது தனிப்பட்ட பாடல் திரட்டுக்காக இந்த ஸ்டுடியோவை பயன்படுத்தி வந்த ராஜா, கடந்த ஒன்றரை மாத காலமாக இந்த பக்கமே வருவதில்லையாம். இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ரெக்கார்டிங் இருந்தால்தான் பேட்டா கிடைக்கும். இந்த பேட்டாவை மட்டுமே நம்பியிருக்கும் இந்த ஊழியர்கள் ராஜாவின் திடீர் ஆப்சென்ட்டால் திக்கி திணறி போயிருக்கிறார்கள்.

நான் வரப்போவதில்லை என்று கூறிவிட்டாலாவது ஸ்டுடியோவை வேறொரு இசையமைப்பாளருக்கு வாடகைக்கு விட முடியும். ஆனால் அவரிடமிருந்து அப்படியொரு பதிலும் வரவில்லையே என்று தவிக்கிறார்களாம் நிர்வாகத் தரப்பில். நேரடியாக கேட்கவும் முடியாமல், பிரச்சனையை சொல்லவும் முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.

இசைஞானிக்கு வேண்டுமானால் இசையே உணவாக இருக்கலாம்... அப்பாவி ஊழியர்களுக்கு?

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter