|
புடிச்ச மாதிரி கதை இருந்தா, கிடைச்சதை வாங்கிகிட்டு படத்திலே வொர்க் பண்ணுகிற டெக்னீஷியன்களும் இருக்கதான் செய்யுறாங்க. (பில்டப்பை பார்த்தா கோடம்பாக்கத்துல மட்டும் மழை பெய்யும் போல...) அப்படி ஒரு டெக்னீஷியனாக உயர்ந்து நிற்கிறார் கலை இயக்குனர் தோட்டாதரணி.
தமிழ்சினிமாவில் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் பெரிய பெரிய ஆர்ட் டைரக்டர்கள் எல்லாமே தோட்டா தரணியின் சிஷ்யர்கள்தான். ஆனாலும் மகா மெகா புராஜக்ட் என்றால் தோட்டாவுக்குதான் முதல் அழைப்பு போகிறது. பீடிகை எதற்கு? விஷயத்துக்கு வருவோம்.
ஒரு படத்திற்கு 25 லட்சமும், இன்னொரு படத்திற்கு அதில் கால்வாசி பணத்தையும் வாங்கிக் கொண்டு பணியாற்றி வருகிறார் தோட்டா. நல்ல கதைகள், தேசிய விருது பெரும் கதைகள் இவற்றுக்கெல்லாம் தோட்டாவின் கம்பெனியில் தனி டிஸ்கவுண்ட் உண்டு. சிவாஜி போன்ற பெரிய படங்களுக்கு 25 லட்சம் சம்பளம் வாங்கிய தோட்டாதரணி, டைரக்டர் சாமி இயக்கும் சிந்து சமவெளி படத்திற்குதான் நாம் மேலே சொன்ன குறைந்த சம்பளத்தை வாங்க சம்மதித்திருக்கிறார்.
"இரண்டு மாசத்தில 400 கதை கேட்டேன். அதில எனக்கு புடிச்ச கதை இது" என்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். அதை உறுதி படுத்துகிற மாதிரி இருக்கிறது தோட்டாவின் சம்பள குறைப்பு! |