|
உள்ளங்காலை நக்குவதும், உச்சி மயிரை இறுக்குவதும் சந்தர்பவாதிகளுக்கு சகஜம்தான். இந்த விஷயத்தில் எழுத்தாளர் சாருநிவேதிதா தேவலாம் போலிருக்கிறது, மணிரத்னம் செய்ய நினைத்த வேலைக்கு! இவர் என்ன செய்தார் என்பதற்கு முன் சாருநிவேதிதா என்ன செய்தார் என்பதை சொல்ல வேண்டாமா?
நித்யானந்தரின் ஜீவன் முக்தி பாலிஸியின் எல்ஐசி ஏஜென்ட் போலவே செயல்பட்டவர் இவர். அவருடைய அருமை பெருமைகளை பற்றியெல்லாம் எழுதுவதை ஒரு சேவையாகவே செய்து வந்தார். (அ)சிங்கம் ஸ்லிப் ஆகி விழுந்துவிட்டதல்லவா? உடனே அவரை பற்றி தாறுமாறாக விமர்சித்து கட்டுரை எழுதப்போகிறாராம்.
இதே போலதான் இருக்கிறது இந்த விஷயமும். ராவணா படத்தில் வரும் முக்கிய கேரக்டர் ஒன்றில் ரஞ்சிதா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று அவரிடம் நேரில் பேசி நடிக்க வைத்த மணிரத்னம், இப்போது படத்தில் வரும் அவரது போர்ஷனை தூக்கிவிட்டு வேறொருவரை நடிக்க வைக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம். இதை எப்படியோ கேள்வியுற்ற ரஞ்சிதா நேரடியாக மணிரத்னத்திற்கே போன் செய்து பேசியதாக தகவல். இந்த சம்பவத்திற்கு பிறகு திரையுலக தொடர்பை விட்டே தொலை தூரத்தில் இருக்கும் ரஞ்சிதா போன் செய்து கெஞ்சியதால் கட் பண்ணும் முடிவுக்கு கட் சொல்லியிருக்கிறாராம் மணி! |