|
நொண்டியடித்துக் கொண்டிருந்த சிறுத்தை ஒருவழியாக உற்சாக நிலைக்கு திரும்பியிருக்கிறது. கார்த்தி நடிக்கும் சிறுத்தை படத்தை கைவிட்டு விட்டார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவியது. ஆனால் சைலண்ட்டாக வேலையை முடுக்கி விட்ட கார்த்தி, பாதி கிணறு தாண்டிவிட்டாராம்!
தெனாவட்டு படத்தை இயக்கிய கதிர்தான் இப்படத்தையும் இயக்கப் போகிறார் என்று முன்பு முடிவாகியிருந்தது. ஆனால் திடீரென்று அவரது இடத்திற்கு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிவா. நடிகர் பாலாவின் சகோதரர் இவர். ஒன்றிரண்டு தமிழ் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். பின்பு தெலுங்கு படவுலகத்தில் இயக்குனராக அறிமுகம் ஆனார். முதல் படமே சூப்பர் ஹிட். இவர்தான் விக்கிரமார்குடு என்ற இந்த தெலுங்கு படத்தின் ரீமேக்கை இயக்குகிறாராம்.
சரி, விஷயத்துக்கு வருவோம். என்ன காரணத்தாலோ தமன்னாதான் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று துடிக்கிறாராம் கார்த்தி. முதலில் அனுஷ்காவிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கிய சிவா, கார்த்தியின் பிடிவாதத்தை அடுத்து தமன்னாவிடம் கதை சொல்லியிருக்கிறார்.
கதையா முக்கியம்? கார்த்தி நடிக்கிறார் என்றதும் சம்மதம் சொல்லிருச்சாம் கிளி! |