|
குளத்துல முங்கறதுக்குள்ளே கோவணத்தை களவாடுற ஊர் இது. இங்கே ஒரு டைட்டிலை பதிவு பண்ணாம சொல்றது எவ்வளவு தப்புன்னு இப்போ புரிஞ்சிருக்கும்.
சேரனும் மிஷ்கினும் இணையும் புதிய படத்தின் டைட்டில் யுத்தம் செய். ஆசை ஆசையாக வைத்த இந்த டைட்டில் பதிவு செய்வதற்குள் கசிந்து வேறொருவர் கைக்கு போய்விட்டது. இப்போது என்ன செய்வது என்று கையை பிசையாமல் பளிச்சென்று வேறொரு டைட்டில் வைத்துவிட்டாராம் மிஷ்கின்.
போர் தொழில் பழகு. இதுதான் அந்த புதிய டைட்டில். யுத்தம் செய் டைட்டிலுக்கு ஏராள வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்த டைட்டிலுக்கு படத்தின் ஹீரோவான சேரனே வாடிப்போகிறாராம். வேறு யோசிக்கலாமே என்று அவரும் மற்றவர்களும் சொல்ல, பிடிவாதத்திற்கு பெயர் போன மிஷ்கின் இதைதான் வைப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம்.
நல்ல டைட்டிலுக்காக அடம் பிடிப்பது தப்பே இல்லை. உறுதியாக இருங்கள் மிஷ்கின்.
|