|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
திடீர் கேன்சல்...
திரும்பி வந்தார் பாலா

ஒரே ஷெட்யூல். நாற்பந்தைந்து நாட்களில் முக்கால்வாசி படத்தை முடிப்பேன் என்று சவால் விடாத குறையாக தென்காசி போன பாலா, போன வேகத்தில் பேக்கப் சொல்லிவிட்டு சென்னை திரும்பிவிட்டார். மொத்தம் 18 நாட்கள்தான் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அதற்குள் பாலா பேக்கப் சொன்னதற்கு காரணம் என்னவாக இருக்கும்? தலையை பிய்த்துக் கொள்கிறார்கள் யூனிட்டில்.

படத்தில் நடிக்கும் முக்கிய ஆர்ட்டிஸ்டுகளுக்கு கூட காரணம் புரியவில்லையாம். ஆனால் 'அவன் இவன்' தரப்பிலிருந்து கசிகிற தகவல் இதுதான். ஆர்யா வரவில்லை. அதனால்தான் இந்த பேக்கப்! உண்மை அதுதானா, அல்லது வேறு ஏதாவதா என்பதெல்லாம் நமக்கெதற்கு? இந்த படத்தில் விஷாலின் கெட்டப் நந்தா சூர்யாவை ஞாபகப்படுத்தும்படி அமைந்திருக்கிறது.

ஒட்ட வெட்டிய முடி. கிட்டதட்ட மொட்டை தலை எபெஃக்ட்! அடர்த்தியான தாடி என்று பார்ப்பதற்கே படு பிரமாதமாக இருக்கிறார் விஷால். கண்களில் கான்டாக்ட் லென்ஸ் இல்லையே தவிர, சற்றே உயரமான சூர்யாவாகவே மாறியிருக்கிறார் விஷால். இந்த படம் முடியும் வரை கெட்டப் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும் என்பதற்காகவே எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று இவருக்கு தடை போட்டிருக்கிறாராம் பாலா.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter