|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
சிபிஐ ஆபிசராகும் சேரன்
மிஷ்கின் அதிரடி ஆட்டம்!

முன்நெற்றியில் விழுந்த சுருள் முடிகளையெல்லாம் நறுக்கி எறிந்துவிட்டு சி.பி.ஐ ஆபிசர் போல இருக்கிறார் சேரன். எல்லாம் மிஷ்கினின் கைவண்ணம். அடுத்து இவர் இயக்கப் போகும் படத்தில் சேரன்தான் ஹீரோ. எப்பவோ துவங்கியிருக்க வேண்டிய இப்படம் கமல் பட ஆசையில் கைநழுவிப் போய் இப்போதுதான் மீண்டும் கை கூடியிருக்கிறது. கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இப்படத்தில் சி.பி.ஐ ஆபிசராகவே நடிக்கப் போகிறாராம் சேரன்.

கதையின் நாயகி அநேகமாக புதுமுகமாக இருக்கலாம். இப்போதிலிருந்தே ஆல்பங்களை புரட்டுவதும், மோட்டுவளை பார்த்து யோசிப்பதுமாக இருக்கிறார் மிஷ்கின். ஆந்திரா, கேரளா என்று தேடுதல் வேட்டையையும் துவங்கியிருக்கிறார்.

நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் மாற்றி ஒரு புது ஆளாக ரசிகர்கள் முன் தோன்றுவேன் என்று சவால் விடாத குறையாக கூறியிருக்கிறாராம் சேரன். தினமும் ஜிம்முக்கு போவதோடு சி.பி.ஐ ஆபிசர்கள் பற்றிய கையேடுகளையும் படித்து வருகிறாராம்.

ஜெயிக்க வேண்டும் என்றால் இவரை 'ன்ரச«' என்று தலைகீழாக புரட்டிப் போட்டால் கூட நல்லதுதான்!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter