|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
கை கொடுத்த தயாநிதி அழகிரி
-உற்சாகத்தில் பையா

தமிழ் படம் தந்த வெற்றியில் உற்சாகமாக இருக்கிறார் தயாநிதி அழகிரி. அந்த உற்சாகத்தை நீட்டிக்க நினைத்ததால் வேறொரு முக்கிய படமும் இப்போது தயாநிதியின் பாக்கெட்டில்!

கார்த்தி தமன்னா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான பையா படத்தைதான் வாங்கியிருக்கிறார் தயாநிதி அழகிரி. எப்போதோ வந்திருக்க வேண்டிய இந்த படம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போயிருந்தது. விரைவில் கோலாகலமாக வெளியிடப் போகிறார்களாம். இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்திக்க வந்தது பையா டீம்.

ஒரு நடிகை வந்தால் மொத்த கேள்வியும் அந்த பக்கம்தானே திரும்பும்? பையா மீட்டிலும் அதுதான் நடந்தது. தமன்னாவை சுற்றி சுற்றியே கேள்வி கேட்டார்கள் நிருபர்கள். அதிலும் மிக முக்கியமான கேள்வி ஒன்று. சில நாட்களாக பத்திரிகைகளில் பரபரப்பாக வெளிவரும் ரஞ்சிதா விவகாரம் பற்றி உங்கள் கருத்தென்ன?

அது ரஞ்சிதாவின் சொந்த விஷயம். அதுபற்றி நான் கருத்து கூற முடியாது என்று எஸ்கேப் ஆனார் தமன்னா. ஆனாலும் விடாமல் பிடித்துக் கொண்டார்கள் நிருபர்கள். ரஞ்சிதா விவகாரத்தினால் ஒட்டுமொத்த நடிகைகளின் இமேஜும் பாதிக்கப்படும் என்று நினைக்கிறீர்களா?

இந்த உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. எல்லோரையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது. ரஞ்சிதா தப்பு செய்து விட்டார் என்பதற்காக மற்ற நடிகைகளை தவறாக நினைக்கக்கூடாது என்றார் தமன்னா.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter