|
யாருக்கும் அடங்காதவராச்சே, அவரை எப்படி அடக்குனீங்க? இப்படி ஒரு கேள்வியை கேட்டு சிம்புவையும், கவுதமையும் ஒரேயடியாக அதிர வைத்தார் ஒரு நிருபர் விண்ணை தாண்டி வருவாயா பிரஸ் மீட்டில். நான் அப்படிப்பட்ட பையன் இல்லீங்க என்று அப்புறமாக அந்த நிருபரிடம் விளக்கினார் சிம்பு.
குணத்தில் தகரமோ, தங்கமோ? சிம்புவின் தங்க குரலுக்கு எப்பவுமே தனி மவுஸ் உண்டு தமிழ்சினிமாவில். எங்க படத்துக்கு ஒரு பாட்டு பாடணும். கொஞ்சம் வாங்களேன் என்றால் மறுக்காமல் வந்து நிற்கிறார் தம்பி. சின்னவங்க பெரியவங்க பார்ப்பதில்லை இந்த விஷயத்தில். அவ்வளவு ஏன்? "நிறைய சின்ன படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதறீங்க. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்களுக்கு அவங்க சார்பா நன்றி" என்று பத்திரிகையாளர்களிடம் சொல்கிற அளவுக்கு சிம்புவிடம் முற்றிக்கிடக்குது பக்குவம்.
சரி விஷயத்துக்கு வருவோம். ஜெயம் ரவி நடிக்கும் தில்லாலங்கடி படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார் சிம்பு. இப்படத்திற்கு இசை யுவன்சங்கர் ராஜா என்பதும், சிம்புவும் இவரும் தோஸ்த் என்பதும் உங்களுக்கு தெரியாத விஷயமா என்ன? |