|
புதுப்புது ஆட்களை வரவழைத்து நம்மை அசரடிப்பதுதான் சசிக்குமாரின் வெற்றி ரகசியம். சின்னத்திரை, பெரிய திரை என்று புகழ் பெற்றிருந்தாலும், சமுத்திரக்கனியை ஸ்கிரீனில் தோன்ற வைத்தது சசிக்குமார்தானே? இவரது படத்தில் வேலை செய்யும் கேஷியர்தான் சுப்ரமணியபுரம் படத்தில் வரும் ஸ்பீக்கர் செட் கணேசன். அடுத்து நாடோடிகள் படத்தில் தனது புரடக்ஷன் மேனேஜரை நடிக்க வைத்திருந்தார். இப்போது சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத அரசியல்வாதி ஒருவரை தனது படத்தில் நடிக்க வைக்கப் போகிறாராம்.
திமுக வின் எம்.பி யும் அற்புதமான இலக்கியவாதியும் பேச்சாளருமான திருச்சி சிவாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்கப் போகிறாராம். சசிக்குமார் ஹீரோவாக நடிக்கப் போகும் இந்த படத்தில் இவருக்கு அண்ணனாக நடிக்கவிருக்கிறார் சிவா. இருவருக்குமே தாடி உண்டு. பார்ப்பதற்கு அண்ணன் தம்பிகள் போலவே இருப்பார்கள். அதனாலேயே தனது அண்ணனாக்கிவிட்டார் போலிருக்கிறது.
தம்பிக்கு ஜோடி இருப்பாங்க. அண்ணி இருப்பாங்களா? |