|
எப்போதோ நடந்திருக்க வேண்டிய விஷயம். கொஞ்சம் லேட்! சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும், சுந்தரப் புன்னகையரசி சினேகாவும் ஜோடி சேரப்போகிறார்கள். பல்வேறு பஞ்சாயத்துகள் தொடர்பாக சினேகா நடிகர் சங்கம் பக்கம் போயிருந்தாலும், ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கலாமே என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டதே இல்லையாம். ஆனால் குடை விரிக்கிற நேரத்தில் மழை வந்த மாதிரி பொறுத்தமாக அமைந்துவிட்டது இந்த ஜோடி சேர்ப்பு.
நடிகர் சங்க இணை செயலாளர் செல்வராஜ் இயக்கும் படத்திற்காகதான் இவர்களை ஜோடி சேர்த்திருக்கிறார்கள். இவருடன் இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார். அவர் கவர்ச்சிக்கு நேர்ந்து விடப்பட்டிருக்கும் ஸ்ருதி. ஆங்.. இந்திரவிழா படத்தில் ஹேமமாலினியாக அறிமுகம் ஆனாரே, அவரேதான்!
கொஞ்சம் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த படத்தில் சரத்குமாரின் பெயர் சுதந்திரம். பழம் பெருமை வாய்ந்த நமது தேசத்தை பற்றி நிறைய பேசப் போகிறாராம். அர்ஜுன்தானே இந்த வேலைய பார்த்திட்டு இருந்தாரு? |