|
கலைஞானி கமல் மய்யம் என்ற பத்திரிகையை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடத்தி வந்தார். தனது ரசிகர்களை இலக்கியத்தின் பக்கம் திருப்ப வேண்டும் என்பதுதான் அவரது பேரார்வம். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளில் தமிழறிஞர்களை வரவழைத்து அவர்களின் சொற்பொழிவை வலுக்கட்டாயமாகவாவது கேட்க வைப்பது அவரது வழக்கம். என்ன காரணத்தாலோ மய்யம், புத்தகக் கடைகளில் மையம் கொள்ளாமல் போனது.
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த இதழை மின் இதழாக கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் கமல். இந்த முறையும் எழுத்தாளர்களையும் இலக்கிய வாதிகளையும் இந்த மய்யத்தில் உலா வர வைக்க வேண்டும் என்பது அவரது ஆசை.
முதல் கட்டமாக தமிழறிஞர்களின் பேட்டியை படம் எடுக்க விரும்பினாராம். தானே இந்த பேட்டியை எடுத்தால் இன்னும் உற்சாகமாக இருக்கும். வாசகர்களுக்கும் அது புத்துணர்ச்சியை தரும் என்பதால் நேரம் ஒதுக்கி எழுத்தாளர்களை தேடி செல்ல ஆரம்பித்திருக்கிறார். தமிழக எழுத்தாளர்கள் மட்டுமல்ல. கேரள எழுத்தாளர்களையும் தேடி செல்லப் போகிறாராம். முதலில் கமல் பேட்டியெடுத்த எழுத்தாளர் நீல.பத்மநாபன். |