|
அஜீத் நடிக்கும் படத்தை கவுதம் இயக்கப்போவது இப்போதில்லை. இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறதாம் அந்த படத்தை துவங்க. அதுவரைக்கும் என்ன செய்யப் போகிறார்கள் இருவரும்? கவுதம் மேனனை பொறுத்தவரை காக்க காக்க இந்தி படத்தை இயக்க போய் விடலாம். ஆனால் தல?
ஏப்ரல் மாதம் துவங்கி அக்டோபர் வரைக்கும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் ஃபார்முலா 2 ரேசுக்கு போகிறாராம். இதற்கான கடும் பயிற்சிகளை இப்போதிலிருந்தே துவங்கியிருக்கிறார் அவர். இவருடன் இன்னும் நான்கு வீரர்கள் இந்தியாவிலிருந்து கலந்து கொள்கிறார்கள். இது தொடர்பாக முதல்வரிடம் பேசி 23 கோடி ரூபாய் அரசு சார்பாக நிதி பெற போகிறார் என்பதையும் முன்பே எழுதியிருந்தோம். அன்று முதல்வர் கலைஞர் அஜீத்தை சந்தித்தபோது கொடுத்த வாக்குறுதி இன்னும் அப்படியே பிரஷ்ஷாக இருக்கிறதாம். இன்னும் சில வாரங்களில் அது தொடர்பான முறையான ஆவணங்களை அரசுக்கு தாக்கல் செய்யப் போகிறாராம் அஜீத்.
இதற்கிடையில் இந்த ஐரோப்பிய பயணத்தை தனியாக மேற்கொள்வதா? அல்லது குடும்பதோடு செல்வதா? என்ற குழப்ப நிலையில் இருக்கிறாராம். குளிர் பிரதேசம் என்பதால் குழந்தையுடன் செல்வதை தவிர்க்கலாம் என்பதுதான் இப்போதைய முடிவாக இருக்கிறது அவருக்கு. ஆனால் புறப்படுகிற நேரத்தில் என்ன முடிவெடுப்பாரோ?
|