|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
நித்யானந்தர்-ரஞ்சிதா விவகாரம்
மேலும் ஒரு நடிகை கலக்கம்?

சுவாமி ஸ்ரீ நித்யானந்த பரமஹம்சர், 'வெறும்' நித்தியானந்தனாகி நிற்கிறார். இவரும் பிரபல நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் ஏடாகூடமாக இருக்கிற காட்சி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து உலகம் முழுவதும் இருக்கிற அவரது ரசிகர்கள் அடைகிற அதிர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், கோடம்பாக்கத்தில்தான் ஷாக்கோ ஷாக்!

இங்கிருக்கிற பல விவிஐபிகள் நித்யானந்தரின் பக்தர்கள். நமது இணையதளத்தில் கடந்த வாரம் கூட ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். விஜய்யின் அப்பா எஸ்ஏசியும் அவரது மனைவி ஷோபா சந்திரசேகரும் நித்யானந்தரிடம் தியானம் கற்றுக் கொண்டார்கள் என்று. அப்போது அவர்களை அருகில் அழைத்து நெற்றியில் தீட்சை கொடுத்து அனுப்பினாராம் நித்யா. இது போல் அவரிடம் தீட்சை பெற்றவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

வருடத்திற்கு ஒருமுறையாவது சாலிகிராமம் பகுதியில் இருக்கிற சினிமா பிரபலங்கள் வீட்டுக்கு விசிட் அடித்துவிடுவார் நித்யா. அப்போது அலங்கார விளக்குகள் ஒளிவீச விசேஷமாக உருவாக்கப்பட்ட ரதத்தில் வருவார் நித்யானந்தம். அவரது பாதம் வீட்டில் பட்டால் போதும் என்று உருகுகிற விவிஐபிகள் அதற்காக ஏராளமாக தட்சணை கொடுப்பார்களாம். இப்படி வருகிற போதுதான் ரஞ்சிதாவும், இன்னொரு நான்கெழுத்து ராக நடிகையும் அவரது கண்பார்வையில் விழுந்திருக்கிறார்கள். விபத்தில் கால் முறிந்திருந்த அந்த நடிகை நித்யானந்தரின் பார்வைக்கு பிறகுதான் மீண்டெழுந்தார் என்பவர்களும் உண்டு. கடந்த சில வருடங்களாக நித்யானந்தத்தின் சீடர்களில் ஒருவராகவே ஆகிவிட்டார் இந்த நடிகை. அவரது ஆசிரமத்திலேயே குடியிருந்த இவர், இந்த சிடியை பார்த்து என்ன ரீயாக்ஷன் கொடுப்பாரோ?

ரஞ்சிதாவின் கணவர் இராணுவ அதிகாரியாக இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். சாலிகிராமத்தில் முன்பு குடியிருந்தவர் பின்பு தி.நகர் பகுதிக்கு மாறிவிட்டார். இந்த சிடி சம்பவத்திற்கு பின்பு ரஞ்சிதாவை தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவரது செல்போன் மற்றும் லேண்ட் லைன் போன்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவரது வீட்டு கதவிலும் பெரிய பூட்டுதான் தொங்குகிறது.

இதற்கிடையில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காரணமாக நித்யானந்தன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் பரவியது. அவர் அங்குதான் தங்கியிருக்கிறாரா? அல்லது தப்பி சென்றுவிட்டாரா? தெரியாத நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டின் முன் மீடியாக்களும், பொதுமக்களும் குவிந்திருக்கிறார்கள். அடுத்த வினாடி என்ன நடக்குமோ?திக்...திக்...திக்...

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter