|
லட்சக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு கூட கிடைக்காத யோகம், பாட்டெழுதுகிற காரணத்தால் பா.விஜய்க்கு கிடைத்திருக்கிறது. நினைத்தால் போதும். முதல்வரை சந்திக்கலாம் என்கிற அளவுக்கு தாழ்ப்பாளை திறந்துவிட்டிருக்கிறது தமிழ்.
முதல் படமான ஞாபகங்கள், பா.விஜய்க்கு அழியாத ஞாபகத்தை விட்டு சென்றாலும், கதாநாயகன் ஆசை அவரை விட்டு போவதாக இல்லை. பலத்த முயற்சிக்கு பின் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் தன்னை நிரூபிக்க நாள் குறித்துவிட்டார் கவிஞர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, முன்னணி ஹீரோயின்களில் ஒருவருக்கு து£ண்டில் என்று அதிரடியாக ஸ்கிரீன் கட்ட தயாராகிவிட்டதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
எல்லாவற்றும் சிகரம் வைத்தாற் போல ஒரு முக்கிய சமாச்சாரம். கலைஞரின் 'பாயும் புலி பண்டாரக வன்னியன்' கதையைதான் படமாக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் இவர்கள். இதற்கு தலைவரின் ஆசியும் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சரித்திரக்கதையை படமாக்க வேண்டுமென்றால் எக்கச்சக்க செலவாகுமே?
ஆமாம்.... ஆமாம்... இந்த படம் இருபது கோடி பட்ஜெட்டில் தயாராகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவ்வளவு பெரிய தலைமை செயலகத்தையே கடுகு பொரிக்கிற நேரத்தில் கட்டி முடித்தவர் கலைஞர். இது முடியாதா என்ன? |