|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
ஆந்திரா-தமிழக ரசிகர்கள்?
செல்வராகவனின் நக்கல் பதில்

ஹோலி பண்டிகையை கொண்டாடுற அளவு சந்தோஷத்திலிருக்கிறார் செல்வராகவன். ஆனால் கலர் பொடிக்கு பதிலாக கைநிறைய மிளகாய் பொடியை எடுத்து தமிழர்களின் முகத்தில் தடவியிருப்பதுதான் சோகம்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றிய தமிழகத்தில் வந்த விமர்சனங்கள் அவ்வளவு திருப்தியாக இல்லை செல்வாவுக்கு. ஹாலிவுட் தரத்துக்கு படம் பண்ணியிருக்கேன். பாராட்ட வேண்டாம். அட்லீஸ்ட் குறை சொல்லாமலாவது இருக்கலாமே என்றெல்லாம் அங்கலாய்த்தார். ஆனாலும் விட்டுக்கோ, தொட்டுக்கோ என்று இன்னமும் படத்தை கிழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆங்காங்கே.

இந்நிலையில் ஆந்திராவில் ரிலீஸ் ஆன ஆயிரத்தில் ஒருவனுக்கு ஆஹா ஓஹோ வரவேற்பு. இந்த படத்தின் வசூல் செல்வாவை ஆந்திரா நோக்கி ஓட வைத்துவிடுமோ என்ற எண்ணத்தில், "நேரடியாக தெலுங்கு படம் பண்ணுற ஐடியா இருக்கா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வா சொன்ன பதிலில்தான் கொதிக்க கொதிக்க எரிச்சல்.

ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கில் பெரிய ஹிட் ஆனதற்கு மகிழ்ச்சி. முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் படத்துக்கு நல்ல வரவேற்பு கொடுத்தாங்க. கதை புரியவில்லை என்று இங்கே சொன்னது போல அங்கே யாரும் சொல்லவில்லை. இதுதான் அவரது நக்கலான பதில்.

தமிழகத்தில் குல விளக்காக கொண்டாடுகிற ஹீரோயின்களை கூட தையத்தக்கா என்று ஆட விட்டு வேடிக்கை பார்க்கிற ஊர் அது. அவர்களோடு நமது ரசிகர்களை ஒப்பிட்டு பார்க்கிற செல்வாவின் துணிச்சலை என்னவென்று வர்ணிப்பது?

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter