|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
மீண்டும் மீண்டும் சன்
விஷாலின் விவரமான மூவ்!

தீராத விளையாட்டு பிள்ளை வெற்றியா, தோல்வியா? கோடம்பாக்க சந்துகளில் குமுறி குமுறி பேசுகிறார்கள். ஆனால் அதற்குள் விஷாலின் கால்ஷீட்டை மீண்டும் வாங்கியிருக்கிறது சன் பிக்சர்ஸ். எப்படி நடந்தது இப்படியொரு அதிசயம்?

கடந்த சில தினங்களுக்கு முன் கசிந்த தகவல் ஒன்றுக்கும் இதற்கும் முடிச்சு போடுகிறார்கள் கோடம்பாக்கத்தில். சிட்டி, என்எஸ்சி ஏரியா இரண்டையும் தானே பெற்றுக் கொண்ட விஷால், அதில் ஒரு தவணை தொகையாக கொடுத்த இரண்டு கோடி செக் ரிட்டன். ஆனால் கோபப்பட வேண்டிய சன், ஆற அமர யோசித்து அவரிடமிருந்து பணத்தை வாங்காமல் கால்ஷீட்டை பெற்றுக் கொண்டார்களாம். சன் பிக்சர்சுக்கு படம் பண்ண ஒட்டுமொத்த கோடம்பாக்க ஹீரோக்களும் ரெடி. அதனால் தானாக வந்த இந்த வாய்ப்பு விஷாலுக்கும் திருப்தியை தர, மேற்கொண்டு நடந்தது இன்னும் சுவாரஸ்யம்.

லட்சுமி புரடக்ஷன்சுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டார் விஷால். இதற்காக சவுரியம் என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கியிருந்தார்கள். ஆனால் உடனே கால்ஷீட் கொடுக்காத விஷால் சன்னுக்கு தனது டேட்ஸை வாரி வழங்க, அதிர்ந்து போன லட்சுமி புரடக்ஷன்ஸ் கொடுத்த அட்வான்சை திரும்ப பெற்றதோடு சவுரியத்தின் ரைட்சையும் விஷால் தலையிலேயே கட்டியது.

அந்த படத்தைதான் சன்னுக்காக நடித்துக் கொடுக்கப் போகிறாராம் விஷால். பாலா படமான 'அவன் இவன்' முடிந்ததும், சவுரியம்தான் விஷாலின் அடுத்த அட்டாக்காக இருக்கும்!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter