|
பி.வாசுவை பொறுத்தவரை பெங்களூரு, இனிமேல் பொங்கலூரு...! இதோ, அடுத்ததாக ஒரு சூப்பர் ஹிட்டை கொடுத்துவிட்டு அசராமல் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் மனுஷர்.
தமிழில் வந்த சந்திரமுகி, முதலில் கன்னடத்தில்தான் வந்தது. பெயர் ஆப்தமித்ரா. இப்போது அதன் இரண்டாவது பாகமாக ஆப்தரக்ஷா என்ற படத்தை எடுத்திருக்கிறார் பி.வாசு. இந்த படம் வெளியாகும் போது படத்தின் நாயகன் விஷ்ணுவர்தன் இயற்கை எய்திவிட்டார். அதுவும் விஷ்ணுவர்தனின் 200 வது படமாம் இது. கடந்த 19 ந் தேதி ரிலீஸ் ஆன இந்த படம் இரண்டே நாளில் ஒன்றே முக்கால் கோடியை வசூல் செய்திருக்கிறதாம்.
700 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை பிளாக்கில் டிக்கெட் விற்கப்பட்டதாம். இப்படி ஒரு ஹிட் படத்தை தமிழிலும் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்புதானே? ரஜினியை அழைத்து படத்தை போட்டு காண்பித்தாராம் பி.வாசு. பிரமாதம் என்று பாராட்டியிருக்கிறார் ரஜினி.
அப்படியே "பிடிங்க கால்ஷீட்டை" என்று அவர் கூறியிருந்தால், ஆப்த... ஸாரி, ஆத்ம சந்தோஷம் அடைந்திருப்பார் பி.வாசு. ஆனால் அப்படியொரு உத்தரவாதம் இந்த நிமிஷம் வரைக்கும் வரவில்லையாம் சூப்பர் ஸ்டாரிடமிருந்து. |