|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தமிழக சட்டசபைக்கு முன் கூட்டியே தேர்தல் வராது: புதிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவிப்பு - விலைவாசி உயர்வு பிரச்சினை: பாராளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி - ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்வு: மத்திய மந்திரி சபை ஒப்புதல் - கோஹினூர் வைரத்தை திருப்பித் தர இயலாது: பிரிட்டிஷ் பிரதமர் - இலங்கையில் சியதா டி.வி. அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - கருணாஸ் வழக்கு: சீமானின் உதவியாளருக்கு முன்ஜாமீன்
காம வேட்டை தரும் வசூல் வேட்டை!
கோடம்பாக்கத்தில் ஒரு குறுக்கு வழி

தமிழ்சினிமாவில் சிபி சக்கரவர்த்திகள் பெருக ஆரம்பித்திருக்கிறார்கள். காட்சிக்கு காட்சி சதை-யை தரவும் தயங்காதவர்கள் இவர்கள். ஒரு காலத்தில் பக்கத்து மாநிலமான கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட படங்களை நம்பியே இயங்கி வந்த மோட்சங்களும், குரோம்பேட்டை வெற்றிகளும் இப்போது உள்ளூர் சரக்கிலேயே செம கிக் ஆகிப்போய் கிடக்கின்றன. இந்த வருடத்தின் முதல் ஹிட் எது? ஆளாளுக்கு ஒரு படத்தை சொன்னாலும், விநியோகஸ்தர்கள் கை நீட்டுவது எந்த படத்தை தெரியுமா?

ஊர் பேர் தெரியாத நட்சத்திரங்கள் நடித்த 'ராச லீலை' என்ற படத்தைதான். கோழி குருடாயிருந்தா என்ன, குழம்பு ருசியா இருந்தா போதும் என்ற மனநிலையில் இருக்கும் ரசிகன், யார் அதில் நடிச்சிருக்காங்க என்பதையா பார்க்கப் போகிறான்?

ராசலீலையின் இந்த அசுர ஹிட் அடுத்தடுத்த கதவுகளை திறந்து வைத்திருக்கிறது. இதே டைப்பில் இன்னொரு படம் தயாராகி வருகிறது. இது தேவலீலை! சிடி யை கம்ப்யூட்டரில் புகுத்தினால் மானிட்டரே சிலிர்க்கிறது. அந்தளவுக்கு ஆடைக்குறைப்பும் ஆலிங்கனமும். இது ரிலீஸ் ஆவதற்குள்ளேயே இன்னொரு படத்தை எடுத்து வருகிறார்கள். இது மிருக ஜாதி!

பத்து புதுமுக நடிகைகள் அவிழ்த்து போட்டு ஆடியிருக்கிறார்களாம். இப்படி ஆடும் மாடலிங் மங்கைகள் வரிசையாக கற்பழித்துக் கொல்லப்படுகிறார்கள். இந்த கொலைகளை செய்பவர் யார் என்று தெரியவரும்போது ஆடியன்சுக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர்.

ஒருவேளை அது நீங்கதான்னு கை காட்டுவாங்களோ என்னவோ?

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter