|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
புள்ளி ராஜா, தில்லு துர...
குழப்பத்திற்கு விடை இதோ

புள்ளி ராஜா, தில்லு துரய தெரிஞ்சுக்கறதுக்கு மக்கள் பட்ட பாடு இருக்கே, அதையே ஒரு செய்தியா எழுதலாம். சில வருடங்களுக்கு முன் திரும்பிய இடமெல்லாம் புள்ளி ராஜா பெருமைகள்தான். யார் இந்த புள்ளிராஜா என்று மண்டையை பிய்த்துக் கொண்ட மக்கள், அடுத்த சில வருடங்களிலேயே அதே நிலைக்கு ஆளாகிற நிலைமை. இந்த முறை அவர்களை குழப்பியது தில்லு துர. ரஜினியின் அறிமுக காட்சியையே ஒன்றுமில்லாமல் செய்கிற அளவுக்கு இருந்தது தில்லு துரயின் என்ட்ரி! இதில் நடித்திருக்கும் பிரபல டான்ஸ் மாஸ்டரும், விடுகதை படத்தின் ஹீரோவுமான ராம்ஜிக்கே போன் போட்டு, "இது படமா? விளம்பரமா? இல்ல... என்னன்னுதான் சொல்லுங்களேன்" என்று வற்புறுத்தியவர்கள் ஏராளம்.

ஒருவழியாக தொலைக்காட்சிகளில் வரும் இந்த விளம்பரத்துக்கு விளக்கம் சொல்லி மக்களின் ஆறாத மனசை ஆற வைத்தார்கள் இதை டைரக்ட் செய்த ஜேடி ஜெர்ரி இரட்டையர்கள்.

தில்லு துரயாக இருந்தவன், மெல்ல மெல்ல உருக்குலைந்து டல்லு துர ஆகிறான். தான் இப்படி ஆனதற்கு விளக்கம் கேட்டு ஜோதிடர்களிடமும், மரத்தடி மருத்துவர்களிடமும், குடுகுடுப்பைக்காரனிடமும் போகிறான். எங்கும் அவனது சந்தேகத்துக்கு விடையில்லை. கடைசியாக நம்பிக்கை மையத்திற்கு வருகிறவன், அங்கு விளக்கம் பெற்று தெளிவு துரயாக வெளியேறுகிறான் என்பது கான்சப்ட். ஒவ்வொரு எபிசோடையும் இருபது வினாடிகளுக்குள் முடிக்க வேண்டும் என்பதே பெரிய சவாலாக இருந்தது. புள்ளிராஜா எந்தளவுக்கு ஃபேமஸ் ஆனாரோ, அந்தளவுக்கு தில்லு துரயும் ஃபேமஸ் ஆகிவிட்டார் என்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்கள் ஜேடியும் ஜெர்ரியும்.

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் எய்ட்ஸ் விழிப்புணர்ச்சியை தெளிவா மக்களிடம் சேர்க்கிற மாநிலமா இருக்கு என்று பெருமைப்பட்டுக் கொண்டார் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரி. இந்த விளம்பரத்திற்காகவும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இவர்கள் செலவழித்த தொகை ஒரு கோடியே இருபது லட்சம்.

ஒருபுறம் விழிப்புணர்ச்சி. மறுபுறம் நல்ல என்ட்டர்டெயின்மென்ட்!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter