|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
இரண்டு முகம் விளம்பரம்
வருத்தத்தில் விஜயகாந்த்!
Irandu Mugam

ஊமை விழிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர் புரட்சி இயக்குனர் அர்விந்த்ராஜ். அதன்பின் சில படங்களை இயக்கியிருந்தாலும், சின்னத்திரை ஈர்ப்பின் காரணமாக அந்த பக்கம் போய்விட்டார். மீண்டும் சில வருடங்கள் கழித்து அவர் இயக்கும் படம் இரண்டு முகம். சத்யராஜ்-கரண் இருவரும் நடிக்கிறார்கள்.

இன்னும் சில தினங்களில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக இரண்டு முகம் பட விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளிவரத் துவங்கியுள்ளன. ஒரு இயக்குனரின் திறமை அப்பட விளம்பரத்திலிருந்து துவங்கும் என்பார்கள். இந்த விளம்பரத்தையும் அந்த கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

அரசியலில் எதிர் எதிர் துருவத்தில் இருக்கிறார்கள் பா.ம.க நிறுவனர் ராமராசும், விஜயகாந்த்தும். இரண்டு முகம் டைட்டிலுக்கு பொருத்தமாக இருவர் படத்தையும் வைத்துதான் இந்த விளம்பரத்தையே டிசைன் செய்திருக்கிறார் அர்விந்த்ராஜ்.

அரசியலில் நுழைந்த பிறகு விஞ்ஞான வளர்ச்சியையும் கற்றுணர்ந்திருக்கும் விஜயகாந்த் தன்னை பற்றி வருகிற செய்திகள் அத்தனையையும் ஸ்கேன் செய்து இமெயிலில் அனுப்ப சொல்வாராம். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இதை நாள்தோறும் படித்துவிடும் அவருக்கு இந்த விளம்பரத்தையும் ஸ்கேன் செய்து அனுப்பியிருக்கிறார்கள். படித்துவிட்டு என்ன சொன்னாராம்?

அவருக்கு சந்தோஷம் இல்லை என்கிறது தேமுதிக ஏரியாவிலிருந்து வரும் தகவல் ஒன்று!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter