|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
நடிகன்னா அலர்றாங்க...
நடிகர் கார்த்தி கவலை!
Karthi

ஆகஸ்ட் 20 ந் தேதி ரிலீஸ் ஆகிறது 'நான் மகான் அல்ல'. கடைசி நேர தம்பட்டமாக இருக்கட்டும் என்று நினைத்திருக்கலாம். சொற்ப நிருபர்களை அழைத்து படம் குறித்து பேசினார் அப்படத்தின் நாயகன் கார்த்தி. 'ரிலீஸ் தேதியை விடுங்க... கல்யாணம் எப்போ சொல்லுங்க?' என்று ஆர்வம் காட்டிய நிருபர்களுக்கு கார்த்தி சொன்ன பதில் தமன்னாவை சுதந்திரமாக சுவாசிக்க விட்டிருக்கும்!

யாருங்க பொண்ணு கொடுக்கிறாங்க. டாக்டர் என்ஜினியர்னா உடனே பொண்ணு கொடுக்கிறாங்க. ஆனால் நடிகன்னா பயப்படுறாங்க. நடிப்பும் ஒரு புரபஷன்தான்னு யாரும் நினைக்க மாட்டேங்கிறாங்க. இந்த நேரத்தில எனக்கும் தமன்னாவுக்கும் லவ்வுன்னு வேற கொளுத்தி போட்டுட்டாங்களா, நமக்கு பொண்ணு கொடுக்கிறதுக்கு அத்தனை தயக்கம் இருக்கு. இருந்தாலும் வீட்ல ஆர்வமா பொண்ணு பார்த்துகிட்டு இருக்காங்க. சீக்கிரம் நல்ல அறிவிப்பு வரும் என்றார்.

நாடு முழுக்க ரசிகைகள் இருந்தாலும், வீட்டுக்கு ஒரு மாட்டு பொண்ணு கிடைக்காம தவிக்கிறது ஆச்சர்யமாதான் இருக்கு!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter