|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
சந்தியா. கீர்த்திசாவ்லாவுக்கு
முன்னணி டி.வி நிறுவனம் அழைப்பு

சின்னத்திரை சீரியல்களுக்கே ஒரு அந்தஸ்தை கொடுத்தது ராடன் டி.வி யின் சித்திதான். அப்புறம் பெரியம்மா, பாட்டி, ஒண்ணுவிட்ட சித்தப்பான்னு ஏகப்பட்ட உறவு முறை சீரியல்கள் வந்தாலும் சித்தியின் பெருமையை பீட் பண்ணவே முடியவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு அதிரடியான சென்ட்டிமென்ட் சீரியலை தர வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம் ராடன்.

வழக்கமாக சின்னத்திரையில் நடிக்கிற நடிகைகள் வேண்டாம். புதுசாக வலை வீசலாம் என்று நினைத்தவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் இருப்பவர்களிடம் பேசிப்பார்த்தால் என்ன என்ற எண்ணம் வந்திருக்கிறது. பளிச்சென்று நினைவுக்கு வந்தார்களாம் சந்தியாவும், கீர்த்தி சாவ்லாவும். இருவரிடமும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்.

ராடனின் அழைப்பே வேடனின் குறியாக நினைத்து விலகி ஓடாமல் காது கொடுத்து கேட்க ஆரம்பித்திருக்கிறார்களாம் இருவரும். இதில் கீர்த்தி சாவ்லா சம்பளம் வரைக்கும் பேச ஆரம்பித்திருக்கிறாராம். சந்தியாதான் இன்னும் நம்பிக்கையோடு வாசலை பார்த்துக் கொண்டிருக்கிறாராம் அங்கே ரமணா, பிரேம்ஜி கூட வரப்போவதில்லை என்பது தெரியாமலே!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter