|
எந்திரன் ஜுரம் ஒவ்வொரு நாளும் ஏறிக் கொண்டே போய் எப்போது தெர்மா மீட்டரை உடைக்குமோ என்ற நிலையில் இருக்கிறது. நடிகர்களில் பலரும் ரஜினி ரசிகர்களாக இருப்பதாலும், ரஜினிக்கு நெருக்கமாக இருக்க நினைப்பதாலும், எந்திரன் பாடல் வெளியீட்டு விழா இன்னொரு நட்சத்திர கலைவிழாவாகவே இருக்கும் என்பது பலரது கணிப்பு. 'சற்றே விலகியிரும் பிள்ளாய்' என்று சிம்புவை பார்த்தால் சில அடி து£ரம் தள்ளியே நிற்கிற ரஜினியை இம்ப்ரஸ் செய்ய நினைத்த எஸ்டிஆர்(?) இந்த விழாவில் ரஜினியின் பாடல் ஒன்றுக்கு மேடையில் ஆடப் போவதாக தகவல். சிம்பு இத செய்யுறாரு. ரஜினியின் மருமகனான தனுஷ் என்ன பண்ணுவாராம்?
பலர் மனதிலும் எழுகிற கேள்விதானே இது? ஆனால் அவர் ஒன்றும் செய்யப் போவதில்லை என்பதுடன் இந்த நிகழ்ச்சிக்கே போகப்போவதில்லை என்றும் சந்தேகத்தை கிளப்புகிறார்கள் திரையுலகில்.
மாப்பிள்ளை படத்தில் நடிக்க அவ்வப்போது டிமிக்கி கொடுத்து வந்த தனுஷை கிடுக்கிப்பிடி போட்டு நடிக்க வைத்துவிட்டன சில சங்கங்களும், அங்கு வந்த புகார்களும். இதனால் இப்படத்தை முடித்துக் கொடுக்கும் முனைப்போடு அவுட்டோர் போயிருக்கிறார் தனுஷ். மாம்ஸ் படமாக இருந்தாலும், மன்ச்சிருங்கோ.... என்பதுதான் தனுஷின் இப்போதைய விளக்கமாக இருக்கிறதாம். என்றாலும் இது கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது என்கிறார்கள் இதே தகவலை கசிய விட்டவர்கள்! |