|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
மாட்டினார் தணிக்கை அதிகாரி
மறுபக்கம் நடப்பது என்ன?

ஆட்டுக்கு தாடி மாதிரி அவசியமே இல்லாதது சென்சார் என்ற குரல் கொஞ்ச நாட்களாகவே ஒலித்து வருகிறது மக்கள் மத்தியில். காரணம், அந்த அமைப்பு செயலிழந்து போய்விட்டதோ என்று அஞ்சுகிற அளவுக்குதான் இருக்கிறது அதன் நடவடிக்கைகள். ஒரு படத்தில் எதெல்லாம் இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் அந்த அலுவலகத்தின் ஒரு ஓரத்திலேயே பிரண்ட் அவுட் எடுத்து ஒட்டப்பட்டிருக்கும். அதில் சில விதிகள்- ஊனமுற்றவரை கேலி செய்யக்கூடாது. இரட்டை அர்த்த வசனங்கள் கூடாது போன்றவை. இவை இரண்டும் இல்லாத ஏதாவது ஒரு படத்தை இப்போது காட்ட முடியுமா? அதனால்தான் மேற்படி வெறுப்பு மக்கள் மத்தியில்!

இந்த நிலையில் காதல் சொல்ல வந்தேன் என்ற படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்க ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டாராம் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தணிக்கை அதிகாரி ராஜசேகர். முதல் தவணையாக பத்தாயிரம் கொடுக்கும் போது களவும் கையுமாக பிடிபட்டிருக்கிறார் இவர். லஞ்சம் இப்போதுதான் நடமாடுகிறதா அந்த அலுவலகத்தில்? திரையுலக வட்டாரத்தில் விசாரித்தோம். பெயர் சொல்ல விரும்பாத சில தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் புலம்பி தள்ளினார்கள்.

ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் இருக்கிற புரோக்கர்கள் மாதிரி இங்கும் புரோக்கர்கள் இருக்கிறார்கள். சென்சார் சர்டிபிகேட்டுக்கு விண்ணப்பிக்கும் போதே இந்த புரோக்கர்கள் மூலம் சுமார் இருபத்தைந்தாயிரம் வரை கொடுத்துவிடுவார்களாம் தயாரிப்பாளர்கள். இது அங்குள்ள மெம்பர்கள், மற்றும் அதிகாரிகள் வரை அவரவர் தகுதிக்கேற்ப பிரித்துக் கொடுக்கப்படுமாம்.

இந்த சென்சார் சர்டிபிகேட் எவ்வளவு முக்கியம் என்பது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்குதான் தெரியும். ஏனென்றால் ரிலீஸ் தேதியை வாய்மொழியாக விநியோகஸ்தர்களிடம் முன் கூட்டியே சொல்லிவிடுவார்கள். அவர்களும் தியேட்டர்களை புக் செய்து வைத்திருப்பார்கள். பெரும்பாலான படங்கள் கடைசி நேரத்தில்தான் முடிக்கப்பட்டு சென்சார் அலுவலகத்திற்கே வரும். "நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருக்கு. உங்க படத்தை அடுத்த வாரம் பார்க்கிறோம்" என்று அதிகாரிகள் சொல்லிவிட்டால் போச்சு. அவ்வளவும் கொலாப்ஸ். அதனாலேயே எப்படியாவது படத்தை உடனே பார்க்க வைக்க வேண்டும் என்று துடிப்பார்கள் தயாரிப்பாளர்கள். அதைவிட முக்கியம் இன்னொன்று. படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துவிட்டால் இன்னும் சிக்கல். தனியார் தொலைக்காட்சிகளில் விற்பதற்கு யு சர்டிபிகேட் இருந்தால்தான் சுலபம். இல்லையென்றால் தொலைக்காட்சிக்காக மறு சென்சார் செய்ய வேண்டும். அது இன்னும் தலைவலி சமாச்சாரம். இதையெல்லாம் சாதகமாக வைத்துக் கொண்டு பந்தாடுகிற அதிகாரிகளும் இருக்கிறார்கள். கஷ்டம் உணர்ந்து செயல்படும் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு இருந்த ராஜு, பாபுராஜேந்திரன், போன்ற அதிகாரிகள் தயாரிப்பாளர்களை அவ்வளவு வாட்டி வதைத்ததாக தெரியவில்லை. ஆனால் புதிதாக பொறுப்பேற்ற ராஜசேகர் தயாரிப்பாளர்களின் இந்த அவசரத்தை நன்றாக புரிந்து வைத்திருந்தார். அதனால்தான் லஞ்சத் தொகையிலும் ஏற்றம். கெடுபிடியும் ஜாஸ்தி என்கிறார்கள் நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத அந்த தயாரிப்பாளர்கள்.

சரி ராஜசேகர் கதையில் என்ன சுவாரஸ்யம்? செய்தி துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் ஹீரோவாக நடித்திருக்கும் படம்தான் இந்த 'காதல் சொல்ல வந்தேன்'. அதைகூட புரிந்து கொள்ள முடியாமல் அவர்களிடமே லஞ்சம் கேட்டிருக்கிறார் என்றால் பொது அறிவுக்கும் இவர்களுக்கும் இருக்கிற சம்பந்தத்தை நினைத்து புளகாங்கித பட வேண்டி இருக்கிறது!

முயலுன்னு நினைச்சு முள்ளம் பன்றிய வருடி கொடுத்த மாதிரி ஆயிருச்சே!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter