|
ஒரு தடவ சொல்லிட்டா என் பேட்டியை நானே திரும்பி படிக்க மாட்டேன்னு 'அவரு' முடிவெடுத்தா சரி. ஆனா 'இவரு' முடிவெடுத்திருக்கிறாரே எப்படின்னு குழம்பிக் கிடக்குது கோடம்பாக்கம். என்னவாம்? கிரீடம் படம் வெளியான பின் அஜீத் ஒரு பேட்டியளித்தார். அதில், 'இனிமே புது இயக்குனர்களோட வேலை பார்ப்பதை மறு பரிசீலனை பண்ண வேண்டியிருக்கு' என்று அலுப்புடன் கூறியிருந்தார். அது நடந்து சில வருடங்கள் கழித்து அவரது கொள்கையை அவரே மாற்ற வேண்டிய நிலை. மதராசப்பட்டினம் படம் பார்க்க அழைத்திருந்தாராம் டைரக்டர் விஜய். கிரீடம் படத்தை இயக்கியவரும் இதே விஜய்தான்.
படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த அஜீத், 'படம்னா இப்படிதான்யா இருக்கணும்' என்று பாராட்டினாராம். அது மட்டுமல்ல, 'உடனே எனக்கொரு கதை சொல்லு. இமீடியட் கால்ஷீட்' என்று கூறியிருக்கிறார். அப்படியே வெங்கட் பிரபுவின் படத்தையும் தற்போதைக்கு தள்ளி வைக்க முடிவெடுத்திருக்கிறாராம். காரணம், அதில் அஜீத்திற்கு கிட்டதட்ட நெகட்டிவ் ரோல்! நால்வரில் ஒருவராக நடிக்க வேண்டிய நிர்பந்தம். எனவே முதலில் விஜய் படத்தை முடித்துவிட்டு பிறகு பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஷாட்டு வைக்கிற டைரக்டர்களுக்கே இப்படி வேட்டு வைக்குதே விதி? |