|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
அந்த பொண்ணா... குட் குட்!
-ரஜினி காட்டிய பச்சைக்கொடி
Geetha

கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ் திரையுலகில் தென்றலாக நுழைந்தவர்தான் புன்னகைப்பூ கீதா. மலேசியாவிலுள்ள புகழ்பெற்ற எப்எம் வானொலியின் அறிவிப்பாளர்தான் இந்த கீதா. இவரது குரலை கேட்டோ, அல்லது ஆளைப் பார்த்தோ புன்னகைப்பூ என்ற பட்டத்தை கொடுத்து கவுரவித்தனர் மலேசிய ரசிகர்கள். தமிழில் அறிந்தும் அறியாமலும், குண்டக்க மண்டக்க என்ற சில படங்களை தயாரித்தவர் சொல்ல முடியாத சில பல காரணங்களால் தமிழ் திரையுலகை விட்டே ஒதுங்கினார்.

வந்தவர் போனாலும் சரி, போனவர் வந்தாலும் சரி, பெரிதாக ரீயாக்ஷன் காட்டிக் கொள்ளாத மீடியாக்களும் ரசிகர்களும் இவரை அநேகமாக மறந்தே போனார்கள். இந்த நிலையில்தான் மீண்டும் அவரது திருநாமத்தை உச்சரிக்கிற மாதிரி ஒரு செய்தி.

மலேசியாவில் உள்ள புத்ரஜெயா அரங்கத்தில் எந்திரன் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. வருகிற 31 ந்தேதி நடைபெறும் இந்த விழாவில் நம்ம புன்னகைப்பூ கீதாதான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறாராம். விழா நிகழ்ச்சிகள் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அவ்வப்போது டிஸ்கஸ் செய்யும் ஷங்கர் இந்த விஷயத்தை அவரிடம் சொல்ல, அந்த பொண்ணா குட் குட்... என்றாராம் சூப்பர் ஸ்டார்.

பின்குறிப்பு- நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் திரையுலக பிரபலங்களை தனி விமானத்தில் மலேசியா அழைத்துச் செல்லப் போகிறது சன் பிக்சர்ஸ்!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter