|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
நஷ்டத்திற்கு நடிகர்கள்
பொறுப்பேற்க முடியாது
-நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஏக பரபரப்புடன் நடந்து முடிந்திருக்கிறது. முன்பு நடந்த இதே கூட்டத்தில்தான் பத்திரிகையாளர்களையும் உள்ளே அனுமதித்து கொதிக்கிற தாரை எடுத்து வீசாத குறையாக குமுறி தீர்த்தார்கள் விவேக், சத்யராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள். அதன்பின் ஏற்பட்ட சர்ச்சைகளின் வடு இப்போதுதான் மெல்ல மெல்ல ஆறிவருகிற நிலையில் ஒரு நிருபரையும் உள்ளே விடாமல் நடந்தது இந்த கூட்டம்.

கூட்டம் முடிந்ததும் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து நிருபர்களிடம் விளக்கம் அளித்தார் நடிகர் சங்க தலைவர் சரத்குமார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்களும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இலங்கையில் தமிழ் இன படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் நாம் அறிவோம். தற்போது அங்குள்ள நம் தமிழர்களின் நிலையையும் அறிவோம். அவர்களின் பிரச்சினைகள் தீர மறு வாழ்வு திட்டத்திற்கு நம்மாலான உதவிகளை மனப்பூர்வமாகவும், பொருள் ரீதியாகவும் செய்து வருகிறோம். ஆயினும் சமீப காலமாக நம் கலைஞர்கள் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இலங்கை செல்வதை தனிப்பட்ட ஒரு சிலர் விமர்சிப்பதும் பத்திரிகை வாயிலாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் தனிப்பட்ட முறையில் மிரட்டுவதையும் நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. எங்களது கலையுலகை சேர்ந்தவர்கள் தொழில் ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலோ இலங்கை செல்லலாமா, வேண்டாமா என்கிற முடிவை கலையுலகை சார்ந்த அனைத்து அமைப்புகள் கொண்ட கூட்டு கலந்தாய்வு குழுவே முடிவெடுக்கும். நடிகர் சங்க உறுப்பினர்கள் அதன் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள்.

திரைப்படத்தின் வர்த்தகத்தில் ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு நடிகர்கள் பொறுப்பல்ல. திரைப்பட வர்த்தகத்தை சார்ந்தவர்கள் லாப நஷ்டங்களுக்கு எங்கள் உறுப்பினர்களை பொறுப்பாக்க முடியாது. அவர்களிடம் நஷ்டஈடு கேட்க முடியாது.

திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் நடிகர் சங்கம் போட்டுள்ள ஒப்பந்தத்தின்படி நடிகர் சங்கத்தில் உறுப்பினரான பிறகே தமிழ் திரைப் படங்களில் நடிக்க முடியும். உறுப்பினர்கள் ஆகாத நடிகர்கள் ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் உறுப்பினர்கள் ஆக வேண்டும். இல்லையெனில் உறுப்பினர் அல்லாத கலைஞர்களுடன் நமது உறுப்பினர்கள் பணி புரிய மாட்டார்கள்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புனர் வாழ்வு பணிகள் தாமதமாக நடக்கிறது. அவதிப்படும் எங்கள் சகோதர, சகோதரியான இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க துரித நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

நடிகர்கள், தொழிலாளர்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீடுகட்டிக் கொள்ள நிலம் ஒதுக்க கொள்கை அளவில் அரசாணை வழங்கிய முதல்வர் கருணாநிதிக்கு பொதுக்குழு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறது

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter