|
கோடை காலம் குளிர்காலம் மாதிரி இது கோடம்பாக்கத்தின் குவா குவா காலம் போலிருக்கிறது. நேற்றைய செய்தி விக்ராந்த்-மானசா தம்பதிகளுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்பது. கடந்த சில வாரங்களாகவே இப்படி மனசுக்கு பக்கத்தில் பீடிங் பாட்டிலை வைத்த மாதிரி ஒரே குவா குவா சத்தம்தான். சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு ஆண் குழந்தை. தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கும் அதே போல ஒரு ஆண் வாரிசு.
இந்த செய்திகள் மின்னலை போல கோடம்பாக்கத்தில் பரவினாலும், மும்பையிலிருந்து தகவல் வந்தும் ஒருவரும் கண்டுகொள்ளாத குவா குவா நியூஸ் இது. வாளமீன் மாளவிகா இரண்டாவது பிரசவத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாராம்.
இதுபோக இன்னும் ஒரு சாக்லெட் நியூஸ். சற்று லேட் மேரேஜ் செய்து கொண்ட மீனா, கர்ப்பமாக இருக்கிறார் என்பதுதான் அது. தனக்கு பிடித்த கம்ப்யூட்டர் என்ஜினியர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்ட மீனா, அதன்பின்பும் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் சமீப காலமாக வருகிற தொலைக்காட்சி, திரைப்பட அழைப்புகளை சற்று ஓரம்கட்டியிருக்கிறார் மீன்ஸ். ஏன்ஸ்? கர்ப்பம்தான்!
கணவருடன் கனடாவில் சுற்றினேன். அதுவும் ஹெலிகாப்டரில் என்று அந்தரத்தில் பறக்கும் ரம்பாதான் அடுத்த குவா குவாவை வெளியிடுவார் போலிருக்கிறது. |