|
'என்னை தெரியுமா' என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில வருடங்களுக்கு முன் அடையார் கேட் ஓட்டலில் நடந்தது. தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ்தான் அப்படத்தின் ஹீரோ. தெலுங்கிலும் தமிழிலும் வெளியிடும் விதத்தில் சென்னையிலும் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தார் மோகன்பாபு. இப்படத்தில் 'தண்ணி கருத்திருச்சு' என்ற பாடலை பாடியிருந்த சிம்புவும் அங்கே வந்திருந்தார். இவரும் மனோஜும் ஒரு கப்பில் இரு ஐஸ்கட்டிகள் என்கிற அளவுக்கு நெருக்கமான நெருக்கம் என்பது அந்த விழாவில்தான் புரிந்தது பலருக்கும்! இன்னொரு செய்தி. அதே விழாவுக்கு வந்திருந்தார் நடிகை சினேகா உல்லால். ஓராயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்ட மாதிரி கண்கள். அப்புறம் அப்புறம்... எல்லாமே திருத்தமாக! என்னை தெரியுமாவின் ஹீரோயினும் இவர்தான்!
'நான் சிம்புவின் ரசிகை' என்றார் அந்த விழாவில் சினேகா. தமிழில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று ஃபங்ஷன் முடிந்ததும் கேட்ட நிருபர் ஒருவருக்கு சினேகா சொன்ன பதில், நல்ல கதையும், சிம்பு மாதிரி ஒரு ஹீரோவும் கிடைச்சா...!
வாய் முகூர்த்தம் பலித்தது இப்போ. சிம்பு நடிக்கும் வானம் படத்தில் சினேகா உல்லாலும் உள்ளாராம்!
பின்குறிப்பு- என்ன காரணத்தினாலோ தனது 'யோகி' படத்தில் நடிக்க அமீர் அழைத்தபோது மறுத்தவர்தான் இந்த 16 வயசு பூந்தொட்டி!
|