|
மவுண்ட் ரோடே சிட்டியின் மையப்பகுதிதான். இந்த மவுண்ட் ரோடிலும் மையப்பகுதியிலிருக்கிறது அந்த கான்வென்ட். கல்வி நிறுவனங்கள் பற்றி ஒரு கவுரவ கணக்கெடுத்தால், இந்த பள்ளிக்கு நிச்சயம் முதலிடம் கிடைக்கும். அவ்வளவு ஏன்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படித்ததும் இங்கேதான். எளிதில் சீட் கிடைக்காது. கல்வி கட்டணம் சொல்லி மாளாது என்றெல்லாம் புகழப்படும் இங்கு படிக்கும் ஏழை(?) மாணவ மாணவிகளுக்கு கல்வி தொகையை வழங்கி உதவியிருக்கிறார் த்ரிஷா.
அடிப்படையில் இரக்க மனசு உள்ளவர்தான் த்ரிஷா. புற்றுநோய் மருத்துவமனைக்கு வருடத்திற்கு ஒரு முறை விசிட் அடித்து அங்குள்ள நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதும் அவரது வழக்கம். ஆரறிவு மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஐந்தறிவு ஜீவன்களுக்கும் மனசு இரங்குவது அவரது பண்பு. ஆனால் பணக்கார பள்ளிக்கூட மாணவர்களுக்கு மனமிரங்கியிருக்கிறாரே என்பதுதான் அதிர்ச்சி.
அப்படியே கார்ப்பரேஷன் ஸ்கூல் பக்கமும் கருணை வைங்க தாயி... |