|
பணியாரம் கடிக்கறதுக்கும் பல்லு வேணும் என்பார்கள் கிராமத்தில். கலையை ரசிக்கவும் கண்ணு வேணும்னு அலுத்துக்குற அளவுக்குதான் இருந்தது பாட்டாளி மக்கள் கட்சியினரின் பார்வை. அதுமட்டுமல்ல, 'பெரியய்யா' அறிக்கைக்கு பிறகு பாபா படப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டு து£க்கி வீசப்பட்டதெல்லாம் கண்கலங்க வைக்கும் கல்வெட்டு சமாச்சாரம். அதெல்லாம் அந்த காலம் என்பது போல இறங்கி வந்திருக்கிறது அக்கட்சியினரின் சினிமா பார்வை என்கிறார்கள் ஒரு விஷயத்தை உற்று கவனித்தவர்கள்.
அண்மையில் நடந்த வன்னியர் சங்க மகளிர் பெருவிழாவை பா.ம.க வெகு சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறது. மாநாடு நடந்த பூம்புகாரில் பலரது கண்களையும் உறுத்திய ஒரு பிரபலம்... சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா! இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு சினிமாவிலும் நடித்த கவர்ச்சி கலக்கல் நடிகை!
நடிகையும் வரணும். ஆனால் கெட்டபேரும் வரக்கூடாது என்று சில முக்கிய தலைகள் கட்டளையிட்டதால் தேவிப்ரியாவுக்கென்றே ஸ்பெஷலாக ஒரு கான்செப்டை உருவாக்கி நிகழ்ச்சி நடத்தினார்களாம். அதனால் ப்ரியாவின் கெட்ட ஆட்டம் அங்கு நடக்கவே இல்லை என்பதுதான் விசேஷம். |