|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
ஆபாச பாடலை எழுதமாட்டேன்
-பாடலாசிரியர் தாமரை உறுதி
Thamarai

தாமரை இலை தண்ணீராகதான் திரைத்துறையில் பணியாற்றுகிறார்கள் சில பெண் கவிஞர்கள். அவர்களில் தாமரை மட்டும் வேறுவிதம். கவிதைகளில் தரம், கருத்துக்களில் உரம் என்று நேர்வழியில் பயணிப்பவர். பாடலாசிரியர் வாய்பை இயக்குனர் சீமான் கொடுத்தார் என்பது பலரும் அறிந்த தகவல். ஆனால் சிறுவயதில் அவரை எழுத ஊக்கப்படுத்தியவர் யார்? இதோ அவரே சொல்கிறார்...

படிக்கும் பழக்கம் என்னை ஐந்தாம் வகுப்பிலேயே கதை எழுத வைத்தது. அது நீதி போதனை வகுப்பு. ஏதாவது ஒரு நீதிக்கதையை எழுத சொன்னாங்க விஜயலட்சுமி ஆசிரியை. தயிர்க்காரி கண்ணம்மா என்ற கதையை எழுதினேன். எல்லாரோட ஏட்டையும் திருப்பி தந்தவங்க என் பேரை மட்டும் கூப்பிடவே இல்லை. கடைசியா என்னை கூப்பிட்டாங்க. இவ மட்டும்தான் சொந்தமா கதை எழுதியிருக்கா. ஒரு பிழை கூட இல்லைன்னு என்னை பாராட்டி கைதட்ட சொன்னாங்க. என் எழுத்துக்கு கிடைச்ச முதல் அங்கீகாரம் அது. அந்த கைத்தட்டல்கள்தான் இன்னைக்கு நிறைய விருதுகளுக்கு காரணமா இருந்திருக்கு.

கிடைக்கிற எல்லா வாய்ப்புகளையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை. தமிழில் மட்டுத்தான் எழுதுவேன். இரட்டை அர்த்தப் பாடல்கள், ஆபாச பாட்டுக்கெல்லாம் என் பேனா வளையாது என்பதில் இந்த நிமிடம் வரை உறுதியாக இருக்கிறேன். இதனால் பொருளாதார ரீதியாக பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்றாலும், என் நோக்கத்தில் நான் வெற்றிருக்கிறேன். பாடலுக்கேற்ற சூழ்நிலை எதுவாக இருந்தாலும் கண்ணியமான வார்த்தைகளால் அதை கையாளலாம். பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது. பஞ்சனையில் காற்று வரும் து£க்கம் வராது. இதைவிட சிறந்த முதலிரவு பாடல் இருக்க முடியுமா? என்கிறார் தாமரை.

மற்றவர்களுக்கும் புரிந்தால் நல்லது.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter