|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
எம்ஜிஆர்-என்டிஆர்-எஸ்டிஆர்?
-ஒரு 'சிம்பு'ள் ஜோக்!
Simbu

கருப்பு எம்ஜிஆர், சிவப்பு எம்ஜிஆர், மாநிற எம்ஜிஆர், சின்ன எம்ஜிஆர், கன்னங்கரேல் எம்ஜிஆர் என்று ஆளாளுக்கு எம்ஜிஆர் பெயரை பட்டா போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் சிம்பு வேறு மாதிரி! அதே சாயலில் இருக்கட்டுமே என்று தனது பெயரை எஸ்டிஆர் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். (சிலம்பரசன் தேசிங்குராஜா ராஜேந்தர் என்பதன் சுருக்கம்தான் இந்த எஸ்டிஆர்)

சமீபத்தில்தான் இவரது அப்பா விஜய.டி.ராஜேந்தர் தனது பெயரில் வலுக்கட்டாயமாக சேர்த்து வைத்திருந்த விஜய-வை து£க்கி வீசினார். அது ஏன் என்பதற்கு அவர் உருவாக்கிய ஸ்கிரீன் ப்ளே பிரமாதம். இப்போது மகன். இவர் எழுதிய ஸ்கிரீன் ப்ளே நிஜமாகவே சுவாரஸ்யம். சிம்பு புதிதாக நடிக்கவிருக்கும் 'வானம்' படத்திற்காக லண்டன் செல்ல விசாவுக்கு விண்ணப்பித்திருந்தாராம். து£தரக அதிகாரி ஒருவர், இவரது தாத்தா அப்பா பெயரை இணைத்து அந்த இனிஷியலையெல்லாம் கூட்டி 'உங்க பேரு எம்ஜிஆர் என்டிஆர்னு வர்ற மாதிரி எஸ்டிஆர்னு வருதே' (இந்த இடத்தில் ஆச்சர்யக்குறி அவசியம்) என்று கூறியிருக்கிறார். இதுவரைக்கும் இந்த மேட்டர் நமக்கு தெரியாம போச்சேன்னு வருந்திய சிம்பு இனிமேல் ரசிகர்கள் தன்னை எஸ்டிஆர் என்று அழைக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்.

அப்படியே அவரது ரசிகர்களுக்கு ஒரு விண்ணப்பம். 'பணம்'னு எழுதி பாக்கெட்ல வச்சுக்கோங்க. உடனே லட்சாதிபதியாகிவிடலாம்!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter