|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
வன்னி எலிகள், 1999
வியக்கும் தமிழ் இயக்குனர்கள்!

நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் பாராட்டுகளையும், பரிசுகளையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கும் இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், மிஷ்கின், சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். முதலில் இந்த விழாவை நடத்திய வசீகரனுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள் அத்தனை பேரும்.

படப்பிடிப்பு இருந்ததால் எனக்கு நார்வே போகிற ஐடியாவே இல்லை. ஆனால் அங்கிருந்து என்னை தொடர்பு கொண்ட வசீகரன், "அண்ணா. நீங்க அவசியம் வரணும்" என்று வற்புறுத்தினார். அவர் கேட்ட முதல் கேள்விதான் என்னை அங்கு போக வைத்தது. "உங்களுக்கு நான் வெஜ்ஜா? வெஜ்ஜா" என்று கேட்டார். விருந்தோம்பலில் தமிழன் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறான் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். எனக்கு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. பிளைட்டில் இறங்கிய நிமிடம் முதல், இங்கு புறப்பட்டு வருகிற வரை என்னை சுற்றி தமிழர்கள்தான் இருந்தார்கள். "அண்ணே, யாருக்கு விருது கிடைக்கும்னு தெரியாது. உங்களுக்கு கிடைக்காம போனாலும் நீங்க பொறுத்துக்கணும்" என்றார் வசீகரன்.

நான் அவரிடம், "இங்கு யார் விருது பெற்றாலும் எனக்கு சந்தோஷம். எல்லாருமே என்னோட சகோதரர்கள்தான். எனக்கு வருத்தமெல்லாம் வராது" என்று சொன்னேன் என்று வெளிப்படையாகவே தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் சசிக்குமார்.

மிஷ்கினின் அனுபவம் வேறு மாதிரியானது. மற்ற இயக்குனர்கள் சென்னைக்கு திரும்பிய போதும், இவர் மட்டும் மேலும் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்துவிட்டுதான் திரும்பினார். "வசீகரனின் அப்பா என்னை அழைத்துக் கொண்டு நார்வேயில் இருக்கும் புகழ்பெற்ற மியூசியம், நு£லகத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றார். நீயும் என்னோட மகன்தான் என்று அவர் சொன்னது என்னை சந்தோஷப்பட வைத்தது" என்றார். இவருடைய 'நந்தலாலா' படத்திற்கு சிறந்த மக்கள் தேர்வு பட விருது கிடைத்திருக்கிறது.

எஸ்.பி.ஜனநாதன் கூட முதலில் இந்த விழாவுக்கு போக தயங்கினாராம். அதற்கான காரணத்தை அவரே சொன்னார். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் என்னுடன் வருகிறவர்கள் நண்பர்களாகவும், ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் இதற்கு முன்பு இவர்களுடன் அதிகம் பழகியதில்லை. ஆனால் என் தம்பிகளுடன் போயிருந்த உணர்வு என்றார். இந்த திரைப்பட விழாவில் ஜனநாதனை அதிகம் கவர்ந்த படம் 1999 என்ற திரைப்படம். முழுக்க முழுக்க கனடாவில் எடுக்கப்பட்ட படம்தான் இது. புலம் பெயர்ந்த தமிழர்களின் கஷ்டத்தை சொல்கிற படமாம் இது.

இந்த படத்தை பற்றிதான் அதிகம் பேசினார் சமுத்திரக்கனி. ரொம்ப ஸ்டன்னிங்கான படம் அது. பிரமாண்டமாக எடுத்திருக்காங்க. அதுமட்டுமல்ல, புலம் பெயர்ந்த தமிழர்களில் பல அற்புதமான இயக்குனர்கள் அங்கு இருக்காங்க. வன்னி எலிகள் என்றொரு படம் பார்த்தேன். இரண்டே இரண்டு எலிகளை வைத்துக் கொண்டு ஒரு அற்புதமான கதையை சொல்லியிருக்கிறார் அந்த இயக்குனர். மனிதர்களை நடிக்க வைப்பதே கஷ்டம். இதில் எலியை நடிக்க வைத்திருக்கிற அந்த இயக்குனரை எப்படி பாராட்டுவது என்று வியந்தார் சமுத்திரக்கனி.

இந்த நால்வரும் வியந்த 1999 படத்தை விரைவில் தமிழகத்திலும் ரிலீஸ் செய்யும் முயற்சியில் இருக்கிறார் வசீகரன். இப்பவே ஒரு வெல்கம் போர்டு வைப்போம்...

Download Beta
பாலை
பாலை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter