|
உயிர், மிருகம் என்று முதல் இரண்டு படங்களிலேயே சர்ச்சையை கிளப்பிய சாமி, அதன்பின் இயக்கிய சரித்திரம் பெயருக்கேற்ற மாதிரியே கல்வெட்டாகும் நிலைக்கு போய் விட்டது. அது வரும் வரை காத்திருக்காமல் வேறு படத்தை தயாரித்து இயக்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.
இவர் இயக்கப் போகும் புதிய படத்தின் பெயர் ‘சிந்து சமவெளி’. புதுமுகங்களை ஜோடியாக்கியிருக்கும் இவர், தனது வழக்கமான படங்களை போலவே இதிலும் விவகாரமான ‘நாட்’ வைத்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
சாமி என்றாலே சைடு வாங்கிய நடிகைகளுக்கு மத்தியில் தைரியமாக முன் வந்திருக்கிறார் அமலா பால் என்ற கிளி. பத்மப்ரியா பிறந்த கேரளா தேசம்தான் இவருக்கும். மைனா என்ற படத்தில் முன்பே அறிமுகம் ஆகியிருக்கும் இவர், பார்ப்பதற்கு மயில் மாதிரியே அழகு!
ஒரு சுபயோக திருநாளுக்காக காத்திருக்காமல் விறுவிறுவென்று வேலையை துவங்கிவிட்ட சாமி, இந்த புதுமுக ஜோடியை வைத்து விதவிதமாக படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அழைப்பிதழுக்கான போட்டோ செஷன்தானாம் இது. ஆச்சர்யம் என்னவென்றால் சாமிக்கு இப்போதெல்லாம் உஷ்ணமே வருவதில்லை! |