|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
சிம்பு இடத்தில் ஜீவா...
சீனா கிளம்பும் கோ டீம்!

கோ படத்திலிருந்து சிம்பு விலகிக் கொண்டாரல்லவா? ஆனாலும் சீனா கிளம்புகிறது கே.வி.ஆனந்த் தலைமையிலான படக்குழு. ஹீரோ இல்லாமல் எப்படி?

ஐயர் வரலேங்கறதுக்காக அமாவாசையும் ஆப்சென்ட் போடுமா? சிம்பு இடத்தில் ஜீவாவை புக் பண்ணிக் கொண்டு ஜம்மென்று கிளம்புகிறார் கே.வி.ஆனந்த். ஜோடி அதே ராதா மகள் கார்த்திகாதானாம். இன்னொரு கேரக்டரில் நடிக்கிற அஜ்மலும் சீனா கிளம்புகிறார் இந்த டீமுடன்.

அயன் படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் தவம் கிடக்கிறார்கள். இந்த நிலையில்தான் கார்த்தி நடிக்க இந்த படத்தை துவங்கினார் ஆனந்த். கதையில் மெல்ல தலையை நுழைத்தாராம் கார்த்தி. இதெல்லாம் நம்ம கிட்ட வேணாம்னு எச்சரித்து எனர்ஜியை வேஸ்ட் பண்ண விரும்பாத ஆனந்த் கார்த்திக்கு பதிலாக சிம்புவிடம் கதை சொன்னார். அவரும் முதலில் ஓ.கே சொல்ல, ஷ¨ட்டிங் கிளம்புகிற நேரத்தில் வந்தது ஹீரோயின் ரூபத்தில் பிரச்சனை. கார்த்திகா வேண்டாம் என்பதில் பிடிவாதமாக இருந்தாராம் சிம்பு.

ஆரம்பத்திலேயே முரண்டு பிடித்தால் போக போக எப்படி சமாளிப்பது என்பதால் முதல் முரண்டுக்கே கழன்று கொண்டார் ஆனந்த். ஜீவாவை பொறுத்தவரை "நீங்க என்ன சொல்றீங்களோ, அது..." என்கிறாராம். போதுமே!

 

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter