|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
நார்வேயில் தமிழ்த் திரைப்பட விழா
முக்கிய இயக்குனர்கள் பயணம்

தமிழ்சினிமாவை வாழ வைக்கிற முயற்சியில் புலம் பெயர்ந்த தமிழர்களும் இப்போது முழு மூச்சாக ஈடுபட துவங்கியிருக்கிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் இது. முழுக்க முழுக்க தமிழ்ப் படங்கள் மட்டுமே பங்கேற்கும் நார்வே தமிழ் திரைப்பட விழாவை விஎம் மியூசிக் ட்ரீம்ஸ் என்ற நிறுவனம் முன்னின்று நடத்துகிறது. இந்த திரைப்பட விழா நார்வே தலைநகர் ஆஸ்லோவில் பிப்ரவரி 6 முதல் 9 ந் தேதி வரை நடக்கிறது.

இதில் சுப்பிரமணியபுரம், பூ, மாயாண்டிக் குடும்பத்தார், போராண்மை, யோகி, நாடோடிகள் உள்பட 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.

மிஷ்கின் இயக்கிய நந்தலாலா திரைப்படம் முதல் முறையாக இந்த விழாவில் கலந்து கொள்கிறது. வெளியுலகின் பார்வைக்கு இந்தப் படம் இப்போதுதான் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு நாட்கள் நடக்கும் இந்த திரைவிழாவில் பங்கேற்க தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குனர்களான, எஸ்.பி.ஜனநாதன், சசிக்குமார், மிஷ்கின் மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோசர் பேர் நிறுவனத்தின் சிஇஓ தனஞ்செயன், திரைப்பட இசையமைப்பாளர் விஎஸ் உதயா ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் உதவியுடன் இந்த திரைவிழா நடக்கிறது.

இந்த விழாவை ஏற்பாடு செய்திருப்பவர் வசீகரன் சிவலிங்கம். நார்வே தமிழரான இவர் அற்புதமான கவிஞரும் கூட. எந்தெந்த படங்கள் எப்போது திரையிடப்படுகின்றன என்ற லிஸ்ட் கீழே-

பிப்ரவரி 6, 2010

10.00 காலை – மாயாண்டி குடும்பத்தார்
13.00 பிற்பகல் – பேராண்மை
16.00 மாலை – அஞ்சாதே
19.00 மாலை – பொக்கிஷம்
21.40 இரவு – பூ

பிப்ரவரி 7

11.00 காலை – மீண்டும் (நார்வேயில் எடுக்கப்பட்ட திரைப்படம்)
13.00 பிற்பகல் – ஈ
16.00 மாலை – 1999 (கனடாவில் எடுக்கப்பட்ட திரைப்படம்)

பிப்ரவரி 8

13.00 பிற்பகல் – சுப்ரமணியபுரம்
16.00 மாலை – யோகி
19.00 மாலை – பசங்க
21.40 இரவு – நாடோடிகள்

பிப்ரவரி 9
16.00 மாலை – நந்தலாலா

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter