|
தமிழ்சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம் 80 களில் வந்த படங்களை பார்க்கிறபோது. ஈகோ இல்லாத கலைஞர்கள். இணையற்ற நடிப்பு, அற்புதமான பாடல்கள் என்று இப்போதும் நினைவுகளை பின்னோக்கி சுண்டி இழுக்கிறது இந்த எண்பது!
பல்லாண்டுகளுக்கு பிறகு அப்போதைய ஹீரோ ஹீரோயின்கள் ஓரிடத்தில் கூடி உற்சாகம் கண்டிருக்கிறார்கள். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் சுஹாசினி மணிரத்னம். ரஜினி, சிரஞ்சவி, மோகன்லால், சரத்குமார், பிரபு, கார்த்திக், அர்ஜுன், வெங்கடேஷ், மோகன், அம்பரிஷ், சுரேஷ், பிரதாப்போத்தன், பானுசந்தர், சங்கர், முகேஷ், நரேஷ், ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், சுஹாசினி, நதியா, அம்பிகா, ராதா, ஷோபனா, பூர்ணிமா, லிசி, சுமலதா ஆகியோர் கூடினார்கள்.
பழைய நினைவுகளை மீண்டும் அசைபோடுவது எத்தனை சுகம் என்பதை அவர்களை கேட்டால் புரியும். இந்த சந்தோஷம் விடிய விடிய நீடித்தது என்பதுதான் கூடுதல் கும்மாளம்! |