|
சொக்க வைக்கிறாரோ இல்லையோ, சோனாவின் தயாரிப்பாளர் அவதாரம் கண்டு நிஜமாகவே சொக்கிப் போகிறது சினிமா வட்டாரம். இவரது தயாரிப்பில் மளமளவென வளர்ந்து நிற்கும் கனிமொழி படத்தை விரைவில் ரிலீஸ் செய்யப் போகிறார் சோனா. நினைத்த விலை கிடைக்கவில்லை என்றால் சொந்தமாக ரிலீஸ் செய்யவும் தயங்கக் கூடாது என்று நினைத்தாராம்.. விளைவு?
தமிழகம் முழுவதும் சோனாவின் சொந்த ரிலீஸ் என்ற பெருமையோடு வரப்போகிறது கனிமொழி. இது ஒருபுறம் இருக்க, இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ஜெய் தானே முன் வந்து மூன்று ஏரியாக்களை வாங்கியிருக்கிறாராம். சுப்ரமணியபுரம் படத்திற்கு பின் பெரிய ஹிட் எதுவும் இல்லாமல் தவித்த ஜெய்யுக்கு இந்த படம் கொடுத்த நம்பிக்கைதான் இப்படி ஒரு துணிச்சலான முடிவெடுக்க வைத்திருக்கிறது.
அது போகட்டும்... சோனாவின் கருணை பார்வையால் மீண்டும் வளர ஆரம்பித்திருக்கிறது பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் பாக்யராஜ் 2010. இடையில் சில மாதங்கள் இந்த படப்பிடிப்பை கிடப்பில் போட்டிருந்தார் சோனா. |