|
குஷ்பு, அமலான்னு வடக்கு நாயகிகளின் துடுக்கு பார்வைக்கு தனது துண்டு, துக்கடாவையெல்லாம் கூட அடகு வைத்து ரசித்தவன் தமிழன். அந்தளவுக்கு இதயம் கவர்ந்த நாயகிகளை இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லை. இன்டஸ்ட்ரிக்கு வந்து முதல் பர்த்டே கொண்டாடுவதற்குள்ளாகவே மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு கிளம்புகிற அளவுக்குதான் அமைகிறது வாய்ப்புகள். இதில் நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்காவெல்லாம் கொஞ்சம் அழுத்தசாலிகள்தான்.
இவர்களது இடத்தை பிடிக்கிற முழு தகுதியும் இருக்கிறது என்று சமீபத்தில் அனைவராலும் வியக்கப்பட்ட நாயகி நம்ம எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் பட நாயகி. எமி தன் உதட்டை திறந்தாலே ஊ...லலலாவாகிற அளவுக்கு விழுந்து விழுந்து ரசித்தான் தமிழன். அந்த பொண்ணு அடுத்ததா என்ன படத்துல நடிக்குதாம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்ட அவனுடைய காதில் தேன் வந்து பாய்கிற செய்தி இதுதான். விரைவில் சூர்யாவுடன் ஜோடி சேர்க்கிறார் எமி.
எனக்கு தமிழ்நாடு ரொம்ப பிடிச்சுருக்கு. நல்ல சான்ஸ் வந்தா நான் இங்கேயே செட்டில் ஆயிருவேன் என்றெல்லாம் ஆசை தெரிவித்த எமி, இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டாராம். எமியை இங்கே வரவழைத்தவர் விஜய் என்றால் வாழ வைத்தவர் கவுதம் மேனன். இவர் இயக்கப் போகும் படத்தில்தான் சூர்யாவுக்கு ஜோடியாகிறார் எமி.
பாப்பாவுக்கு கூவக்கரையில ஒரு வீடு பாரேய்.....
|