|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ஆமா, இவரு எந்த கார்த்தி?
நடிகர்களின் பெயர் குழப்பம்

தமிழ் சினிமாவில் மலிந்து கிடக்கிறார்கள் கார்த்திக்குகளும், கார்த்திகாக்களும். பருத்திவீரன் கார்த்தி, பழைய நடிகர் கார்த்திக், கொல கொலயா முந்திரிக்கா கார்த்தி என்று ஏகப்பட்ட குழப்பம். மகளிர் அணி மட்டும் மட்டமா? திண்டுக்கல் சாரதி கார்த்திகா, து£த்துக்குடி கார்த்திகா, ராதா மகள் கார்த்திகா என்று ரவுண்டு கட்டுகிறார்கள். இந்த பெயர் குழப்பம் திருச்சி நகர இன்டலிஜென்ஸ் போலீஸ் வட்டாரத்தையை குழப்பி குட்டையை கலங்கடித்துவிட்டதாக தகவல்.

ஆயிரத்தில் ஒருவன் பிரமோஷனுக்காக திருச்சி சென்ற கார்த்தி, தான் வரும் தகவலை யாரிடமும் சொல்லாமல் திடீர் தியேட்டர் விசிட் அடித்துவிட்டார். விஷயத்தை கேள்விப்பட்ட நிருபர்களும் பாய்ந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் நிறைந்திருக்கும் ஒரே கேள்வி, "உங்களுக்கு யாரு கூட லவ் என்பதுதானே?" திருச்சி நிருபர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. "தமன்னாவுக்கும் உங்களுக்கும் லவ்வாமே" என்றொரு கேள்வியை கேட்க, "அப்படியெல்லாம் இல்லை" என்று சமாளித்தார் கார்த்தி.

இவரது வருகையை லேட்டாக தெரிந்து கொண்டு தியேட்டருக்கு ஓடிய இன்டலிஜென்ஸ் போலீசாருக்கு, கார்த்தி கிளம்பிவிட்டார் என்ற தகவலே மிஞ்சியது. சரி, போகட்டும். நிருபர்களிடம் "அவர் என்ன சொன்னார்?" என்று விசாரிக்க, "தமன்னாவுடன் காதல் இல்லைன்னு சொன்னார்" என்றார்கள் நிருபர்கள். போலீசார் நினைத்தது அரசியல்வாதி கம் நடிகர் கார்த்தியை. "அவரு ஏங்க தமன்னாவை லவ் பண்ணுறாரு?" என்றார்களாம் அதிர்ச்சியோடு.

நாட்டிலே லட்சக்கணக்கான பெயர்கள் இருக்க, ஒரே பெயருக்கு போட்டி போட்டால் இப்படிதான் ஆகும் போலிருக்கு!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter