|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

அரசியல்வாதிகளிடம் கேளுங்க!
இலங்கை குறித்த கேள்விக்கு கமல் பதில்...

Unnai Poll Oruvan

தலைவன் இருக்கின்றான்ங்கிற பேரே நல்லாதானே இருந்திச்சு? 'உன்னைப் போல் ஒருவன் பிரஸ்மீட்டில் கமலிடம் கேட்டபோது, 'அதைவிட இந்த பேரு நல்லாயிருக்கு. அதுமட்டுமில்லே, இந்த பேரு ஜெயகாந்தன் எழுதிய நாவலோட பேரு. ஜெ.கேயோட 75 வது பிறந்தநாள் வருடத்தில் இந்த பெயரை வைக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமா இருந்திச்சு. அதனாலதான்' என்றார் கமல்.

ஏன் ரீமேக்? என்ற இன்னொரு கேள்விக்கு கமலின் பதில் சுவாரஸ்யம். 'தமிழில் வந்த முதல் ரீமேக் கம்பராமாயணம்தான். வால்மீகி எழுதிய ராமாயணத்தை கம்பர் ரீமேக் பண்ணினார். அதுமட்டுமில்லே, இந்தியில் வந்த 'வெட்னஸ் டே' படத்தை அவங்க நல்லா பண்ணியிருக்காங்க என்பது என்னோட முதல் ஒப்புதல்.

இந்த கதைக்கு இவ்வளவு ஸ்டார் வேல்யூ உள்ள இரண்டு ஹீரோக்கள் வேணுமா? சாதாரண, நன்றாக நடிக்கக் கூடிய இரண்டு நடிகர்களே போதுமே? என்றால், பளிச்சென்று அடித்தார். 'நட்சத்திரமானது எங்க தப்பு இல்லையே? அது உங்க தப்பு!'

இதுபோன்ற உங்க முயற்சி, அடித்தட்டு மக்களை போய் சேரவில்லையே? இந்த கேள்விக்கு கொஞ்சம் 'சுள்' ஆனது கமலின் முகம். கம்பராமாயணம் அரேபியாவுக்கு போய் சேரணும்னு நினைக்கக் கூடாது!

பேச்சை மெல்ல இலங்கை பிரச்சனை பற்றி திருப்பிய போது இன்னும் சூடானது கமலின் முகம். இலங்கை பிரச்சனை பற்றிய உங்க கேள்வியை எங்களை மாதிரி கலைஞர்களிடம் கேட்காதீங்க. அரசியல்வாதிகளிடம் கேளுங்க. தலைவர்கள் அது சம்பந்தமா பேசிட்டு இருக்காங்க. நல்லதே நடக்கும்னு நம்புவோம் என்று கூறிவிட்டு அடுத்த பதிலுக்கு தாவினார்.

இப்படத்தில் இரண்டு இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்துகிறார் கமல். பிரபல எழுத்தாளர் இரா.முருகன் வசனம் எழுதுகிறார். பிரபல கவிஞர் மனுஷ்யபுத்திரன் பாடல் எழுதுகிறார். கமல் கொடுத்த வாய்ப்பு பற்றி பேசிய மனுஷ்யபுத்திரன், நான் கமலின் தீவிர ரசிகன். அவரிடமிருந்து அழைப்பு வந்ததும் மிகுந்த ஆச்சர்யத்துடன் அவரை பார்க்க போயிருந்தேன். இப்படத்திற்கு பாடல்கள் எழுத சொன்னார். எனக்கு சினிமா பாடல்களை எழுதி பழக்கமில்லையே என்றேன். முதலில் எழுதுங்கள். பார்த்துக் கொள்ளலாம் என்றார். அன்று இரவே அந்த பாடலை எழுதிக் கொண்டுபோய் கொடுத்தேன். கையில் வாங்கிய ஸ்ருதி அதை பாடியே காட்டினார் என்று ஆச்சர்யம் காட்டினார் மனுஷ்யபுத்திரன்.

-ஆர்.எஸ்.

Download Beta
பாலை
பாலை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter