|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ரஜினிகாந்த்தின் இளைய மகள் திருமண நிச்சயத்தார்த்தத்திற்கு ஜெயலலிதாவிற்கு நேரில் சென்று அழைப்பு - தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் சச்சின் 46வது சதம் அடித்தார்: இந்தியா தோல்வி - எனது கணவர் கைதாகவில்லை; கடத்தப்பட்டுள்ளாரென இலங்கை அரசு மீது சரத்பொன்சேகா மனைவி குற்றச்சாட்டு -

ஜெயம் ரவி திருமணம். ரஜினி, கமல் நேரில் வாழ்த்து

நடிகர், நடிகைகளின் டீன் ஏஜ் பருவம் கண்ணாடி டம்ளர்கள் போல கவனமாக கையாளப்பட வேண்டியவை. அதில் சிறு கீறல் கூட விழாமல் இருந்தவர் ஜெயம் ரவி. (அப்ப எங்க டீன் ஏஜ் பருவம் எவர் சில்வர் டம்ளரா என்று வம்பு கிளப்புபவர்களுக்கு, சினிமா அதிகம் கவனிக்கப்படுகிற ஏரியா என்பதால்தான் இந்த உவமை!) விரும்பிய பெண்ணை கூட, விவகாரத்தை வளர்க்காமல் நிறைவேற்றிக் கொண்ட வல்லமை அவரது அதிர்ஷ்டம்.

நினைத்தபடியே காதல் மனைவி ஆர்த்திக்கு இன்று காலை 8.46 க்கு தாலி கட்டினார் ஜெயம் ரவி. பட்டு வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார் ரவி. தங்க நிற பட்டுப்புடவை அணிந்திருந்தார் ஆர்த்தி. அடையார் பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் அமைந்துள்ள மௌபரிஸ் ஹாலில் இந்த திருமணம் கோலாகலமாக நடந்தது.

ரஜினி, கமல், ஜெயராம், அர்ஜுன், சுந்தர்சி, குஷ்பு, ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராதிகா சரத்குமார், சிபி, ஸ்ரீதேவி விஜயகுமார், வெங்கட் பிரபு, அமீர், ஜனநாதன், எஸ்.பி.முத்துராமன், ஹரி, உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன், முதல்வரின் கலைஞரின் மகள் செல்வி செல்வம் அவர்களும் கலந்து கொண்டார்.

இல்லற வாழ்வை இனிதே துவங்கும் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதிக்கு தமிழ்சினிமா.காம் தனது இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

-ஆர்.எஸ்

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter