|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சென்னை வங்கி்க்கொள்ளையில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் தமிழக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர் - நடிகர் சயீப் அலிகான் விடுதலை - ஐக்கிய நாடுகள் சபையின் விவாதத்திலிருந்து இலங்கை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் நீக்கம்

தமிழ்சினிமாவில் ஒரு 'வெயிட்' ஹீரோ!

விஜயகாந்தையும், மோகன்லாலையும் மிக்ஸ் பண்ணிய மாதிரி இருக்கிறார் சிவகிரி. இவர் நடிக்கும் படத்தின் பெயரும் சிவகிரிதான். கதையும் வெயிட், கதாபாத்திரமும் வெயிட் என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொள்ளலாம் படத்தின் இயக்குனர் சிவாஜி. ஏனென்றால் இன்றைய தேதிக்கு சிவகிரிதான் தமிழ்சினிமாவின் 'வெயிட்டான' ஹீரோ!.

மூன்று ஹீரோயின்களோடு அவ்வப்போது ஆட்டம் போட்டாலும், படத்தில் இவருக்கு போலீஸ் அதிகாரி வேஷம். ஒரு காட்சியில் க்ளாஸ் ரூமில் இருப்பது போலவும் காண்பித்தார்கள். ஒருவேளை துப்பறிய வந்தாரோ என்னவோ?

சிவாஜியின் நண்பர் அழகிரி பாண்டியன் என்பவர்தான் எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார். 'திருத்தணியில் சாமி கும்பிட்டுட்டு இருந்தேன். அந்த நேரம் பார்த்து சிவாஜியிடம் இருந்து போன். ஒரு கம்பெனிக்கு கதை சொல்லப் போறேன்னாரு. நல்லபடியா முடியும், போயிட்டு வாங்க என்றேன். சாமி கும்பிட்டுட்டு அன்று சாயங்காலமே சிவாஜியை தொடர்பு கொண்டு என்னாச்சு என்றேன். அட்வான்சே வாங்கிட்டு வந்திட்டேன்னாரு' என்று சிவகிரி படத்தை பக்தி ஏரியாவோடு முடுச்சு போட்டார் அழகிரி பாண்டியன்.

'மவுண்ட்ரோடில் முக்கியமான காம்ப்ளக்ஸ் இவங்களோடதுதான். அதுமட்டுமில்லே, ஏராளமான சொத்து இருக்கு. ரெக்கார்டிங் தியேட்டர், எடிட்டிங் சூட்டுன்னு போஸ்ட் புரடக்ஷனுக்கு தேவையான எல்லா கருவிகளும் வாங்கி வச்சிருக்காங்க. யாராவது கஷ்டப்படுற தயாரிப்பாளர்கள் வந்தா, சகாய விலையில் பயன்படுத்திக்கலாம்' என்று மேடையில் அறிவித்தார்கள்.

சிவகிரிக்கு, மேலும் பல ரவுண்டுகள் இருக்குன்னு சொல்லுங்க!

-ஆர்.எஸ்

பாலை
Download Beta
பாலை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter