|
அவதார படத்தை இந்தியிலே ரிலீஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு. தமிழில் பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த படம், போட்ட காசை எடுக்க முடியுமா என்ற பெரும் கேள்வியை எழுப்பியது. “நானே பிசினசுக்கு வழி சொல்றேன்” என்று ஐடியா கொடுக்க வந்தார் ஹீரோ. “வேணாம் சாரு. நானே பார்த்துக்கிறேன். நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க” என்ற தயாரிப்பாளர், தனது சாமர்த்தியத்தில் படத்தை ரிலீஸ் செய்து லாபத்தையும் ஈட்டினார்.
அவதாரம் இந்திக்கு போவதில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே வந்தது. எப்படியோ ரிலீசுக்கு தேதி குறித்தார் தயாரிப்பாளர். ரிலீஸ் நேரத்தில் தலையை நுழைத்த ஹீரோவும், இயக்குனரும், தங்களுக்கும் பங்கு வேண்டும் என்றார்களாம். ஹீரோவுக்கு முப்பது சதவீதமும், டைரக்டருக்கு இருபது சதவீதமும் லாபத்தில் பங்கு தருவதாக சொல்லி படத்தையும் ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர். அந்தோ பரிதாபம்! ஆறு கோடி நஷ்டம்.
லாபத்திலே பங்கு கேட்டாங்களே. நஷ்டத்திலே பங்கெடுத்துப்பாங்களா? ஆறு கோடியில் ஐம்பது சதவீத நஷ்டத்தை பங்கு போட்டால் மூணு கோடி தேறுமே என்று தயாரிப்பாளர் ரெண்டு பேருக்கும் போன் மேல் போன் அடிக்கிறாராம். எடுத்தாதானே?
நீ அரிசி கொண்டு வா. நான் உமி கொண்டு வர்றேன். ஊதி ஊதி சாப்பிடலாம் கதையா இருக்கே?
-மனஸ்வினி |